சாந்தி மார்க்கமும் சிலைக்கு மாலையும்!

-M.I. அகமட் முஆத்

நேற்று (04-04-2012) புதன்கிழமை காலை ஆரையம்பதி – காத்தான்குடி எல்லையில் ஆரையம்பதி பிரதேச சபையின் தலைவர் திருமதி கிறிஸ்டினா சாந்தன் தலைமையில் நடைபெற்ற  விவேகானந்தர் சிலை நடும் நிகழ்வுக்கு காத்தான்குடியில் இருந்தும் சில பிரமுகர்கள் சென்றிருந்தனர்.

பல்லின மக்கள் கலந்து வாழும் இலங்கை திருநாட்டில் பண்டிகைகளும், சர்வமத ஒன்றுகூடல்களும் இதே போல் இன்னும் பல தவிர்க்கமுடியாதவையே. இவ்வாறான நிகழ்வுகள் கடந்த 30 வருடகாலமாக இலங்கையில் நிலவியிருந்த போர் மேகங்களின் முறுகல்களை அகற்றி, இன உறவுகளை வலுசேர்க்கும் என்பது எந்த சந்தேகமும் இல்லை.

சாந்தி மார்க்கம் போதிக்கும் இஸ்லாமும் இன நல்லுறவைப் பேணும் படியும் மற்ற மதத்தினரின் உரிமைகளுக்கும் அவர்களின் மத அனுஸ்டானங்களுக்கும் கலங்கம் ஏற்படுத்தாவண்ணம் நடக்கச் சொல்லியும் எங்களுக்குக் கற்றுத் தருகின்றது.  இந்நிகழ்வுக்கு காத்தான்குடியை கௌரவப்படுத்தி இந்நிகழ்ச்சிக்கு,  இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். உண்மையில் வரவேற்கத்தக்கதே.

எமது இஸ்லாமிய மார்க்கம் சிலை வணக்கங்களையும் அதற்கு நிகரான எந்த செயற்பாடுகளையும் ஆதரிப்பதில்லை என்பது தமிழ் சகோதரர்களுக்கு தெரியாத விடயமும் அல்ல!  இந்நிகழ்ச்சிக்கு தங்களை அழைத்திருக்கும் போது,  இதுபற்றிய தெளிவான எமது மார்க்க விடயத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஏற்கனவே தெரியப்படுத்தி இருந்திருக்கலாம். அல்லது சமய காரணங்களைக் கூறி அவ்விடத்தில் தவிர்ந்து கொண்டிருக்க முடியும். தவிர்ந்து கொள்வதால் அங்கு எந்த மனக்கசப்புகளும் ஏற்பட்டிருக்காது.

காத்தான்குடியின் தலைமை நிறுவனமான சம்மேளனம் அண்மைக் காலமாக இன நல்லுறவில் கூடுதல் கவனம் செலுத்தி வருவது உண்மையில் பாராட்டத்தக்கவை. இருந்தும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட சிலை வணக்கம், நினைவுச் சின்ன உருவங்களை அலங்கரித்தல், அவற்றிற்கு மாலை போடுதல், வர்ணம் பூசுதல், கைகும்பிடுதல், குத்துவிளக்கு ஏற்றுதல் எல்லாமே இலங்கை நாட்டில் பல்லின மக்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது தவிர்க்க முடியாதவை. இதன்காரணமாக அன்று முதல் இன்று வரை பல முஸ்லிம் அரசியல் வாதிகள் விமர்சிக்கப்பட்டும் வருகின்றனர். இருந்தும் இஸ்லாம் தடுத்கும் இவ்விடயத்தை ஒரு முஸ்லிம் ஊரின் தலைமைத்து அமைப்பின் தலைவரும் ஒரு ஜூம்ஆப் பள்ளிவாயலின் தலைவருமான அல்ஹாஜ் M.I.M. சுபைர் (JP) அவர்கள் தவிர்த்திருக்கலாம்!

Published by

Leave a comment