ஐவருக்கு ஒன்று என்ற அடிப்படையில் வாகனங்களின் பாவனை நாட்டில் அதிகரிப்பு

வாகனங்கள் நாட்டிற்கு சுமையாக அமைவதை தவிர்க்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு

2009 ம் ஆண்டு 3421 ஆக இருந்த காரின் இறக்குமதி தொகை 2011ம் ஆண்டில் 54285 ஆகவும், 170 ஆக இருந்த வேன் மற்றும் கெப் ரக வாகனங்களின் இறக்குமதி 12838 ஆகவும், 34563 ஆக இரந்த முச்சக்கர வண்டியின் இறக்குமதி எண்ணிக்கை 137816 ஆகவும், 139000 ஆக இருந்த மோட்டார் சைக்கிளின் இறக்குமதி எண்ணிக்கை 252318 ஆகவும், 34525 ஆக இருந்த பஸ் மற்றும் ட்ரெக்டர்களின் எண்ணிக்கை 66706 ஆகவும் அதிகரித்துள்ளதாக இலங்கை சுங்க திணைக்களத்தின் புள்ளி விபரங்களின் அடிப்படையில் தெளிவாக கூற முடியும்.

இலங்கையில் ஐவருக்கு ஒருவாகனம் என்ற அடிப்படையில் வாகனங்களின் பாவனை வேகமாக அதிகரித்து காணப்படு வதாக அமைச்சரவை பேச்சாளரும், தகவல் ஊடகத்துறை பதில் அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

வாகனங்களின் பாவனை நாட்டுக்கு சுமையாக அமைந்திடாமல் இருப்பதற்காக வேண்டியே வாகனங்களின் இறக்குமதி வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்த அமைச்சர்,அவ்வாறு கட்டுப்படுத்தாவிடின் அடுத்து வரும் இரண்டு வருடங்களில் இந்த நாட்டிலுள்ள வீதிகளில் பாரிய வாகன நெரிசல்கள் ஏற்படும். அதனால் பாரிய காவல்களுக்கு முகம் கொடுக்க நேரும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

பதில் ஊடகத்துறை அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில்,

2009ம் ஆண்டில் 2 இலட்சத்து 11 ஆயிரத்து 679 ஆக இருந்த வாகன இறக்குமதியின் எண்ணிக்கை 2011ம் ஆண்டளவில் 5 இலட்சத்து 23 ஆயிரத்து 963 ஆக அதிகரித்துள்ளது. இதனால் எரிபொருளின் பாவனை 2086 மெட்றிக் தொன்னிலிருந்து 230 மெட்றிக் தொன்னாக அதிகரித்துள்ளது.

எனவே மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான நிதி ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 715 மில்லியன் ரூபாவிலிருந்து ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 746 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

2009 ம் ஆண்டு 3421 ஆக இருந்த காரின் இறக்குமதி தொகை 2011ம் ஆண்டில் 54285 ஆகவும், 170 ஆக இருந்த வேன் மற்றும் கெப் ரக வாகனங்களின் இறக்குமதி 12838 ஆகவும், 34563 ஆக இரந்த முச்சக்கர வண்டியின் இறக்குமதி எண்ணிக்கை 137816 ஆகவும், 139000 ஆக இருந்த மோட்டார் சைக்கிளின் இறக்குமதி எண்ணிக்கை 252318 ஆகவும், 34525 ஆக இருந்த பஸ் மற்றும் ட்ரெக்டர்களின் எண்ணிக்கை 66706 ஆகவும் அதிகரித்துள்ளதாக இலங்கை சுங்க திணைக்களத்தின் புள்ளி விபரங்களின் அடிப்படையில் தெளிவாக கூற முடியும்.

எனவே வாகனங்களின் பாவனை நாட்டிற்கு சுமையாக அமையும் பட்சத்தில் அவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

முப்பது வருட காலம் இந்த நாட்டில் யுத்தம் நிலவியதால் சொந்தமாக வாக னங்களை வைத்துக் கொள்ள அநேகமானோர் முன்வரவில்லை. இந்நிலையிலேயே 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற பிறகு மக்களின் நலனை கருத்திற் கொண்டு வாகன இறக்குமதி வரியை குறைக்க தீர்மானித்தோம். அதன் உச்சக்கட்ட பயன்களை மக்கள் அனுபவித்ததின் பிரதிபலனாகவே தற்போது வேகமான வாகன அதிகரிப்பை காண்பிக்கின்றது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவே எவரதும் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுக்கவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்த அமைச்சர் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டே இந்த தீர்மானத்தை அரசு எடுத்ததாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தேசத்தை கட்டியெழுப்புதல் உட்பட மக்களுக்கு தொடர்புடைய ஐந்து வகையான வரிச் சட்டத்தை நிறைவேற்றி அதன் மூலம் மக்கள், வியாபாரிகள், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், விவசாயிகள் என்று பலதரப்பட்டவர்களுக்கு வரிச் சலுகை, வரிக்குறைப்பு செய்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், இது தொடர்பில் பேசுவதை விடுத்து வாகன வரி அதிகரிப்பு என்ற ஒரு விடயத்தை மாத்திரமே வைத்து அதனை பெரும் பிரச்சினையாக காண்பிக்க சிலர் முற்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எனவே வாகன வரி அதிகரிப்புக்கும் சர்வதேச நாணய நியத்திற்கும் எந்த ஒருவருக்குமோ எந்தவித சம்பந்தமும் இல்லை. அதேபோன்று எவரது நிபந்தனைகளுக்கும் அடிப்பணியவில்லை என்றும் அமைச்சர் உறுதியாக தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அதுகல, மேலதிக பணிப்பாளர் நாயகம் சந்திரபால லியனகே மற்றும் தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் ஆரிய ரூபசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

-thinakaran

Published by

Leave a comment