கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மீள்திருத்தப் பெறுபேறுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
உ/த பரீட்சைக்குத் தோற்றி மீள் திருத்தத்திற்காக விண்ணப்பித்த மாணவர்கள் விரக்தி மற்றும் கவலையுடன் இருப்பதாக சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
உ/த பரீட்சை பெறுபேறு வெளியானதன் பின் அதில் காணப்பட்ட சிக்கல்களால் சமூகத்தில் பாரிய பரபரப்பு ஏற்பட்டது.
அதனால் விடைத்தாள் மீள் திருத்தத்திற்கு 140000 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இதற்கான பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இன்னும் வெளியிடப்படாதுள்ளமை சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
-adaderana
Leave a comment