மோட்டார் வாகனங்களில் ஆசனப்பட்டி அணியாதவர்களுக்கு அந்த இடத்திலேயே தண்டப்பணம் அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய வாகனத்தில் ஆசனப்பட்டி அணியாமல் பயணம் செய்யும் சாரதிக்கும், சாரதிக்கு அருகில் முன் ஆசனத்தில் இருந்து ஆசனப்பட்டி அணியாமல் செல்லும் பயணிக்கும் தலா 1000 ரூபா வீதம் தண்டப்பணம் அறவிடப்படும் என அமைச்சரவையில் பதில் பேச்சாளர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார். இது தொடர்பாக அமைச்சர் குமார வெல்கம முன் வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்காக மோட்டார் போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வுள்ளது.
பாராளுமன்றத்தில் இது அங்கீகாரம் பெற்றால் சாரதிக்கு மாத்திரமின்றி முன் ஆசனத்தில் பயணஞ் செய்யும் பயணிக்கும் ஆசனப்பட்டி அணியாமைக்கு அவ்விடத்திலேயே 1000 ரூபா அபராதம் அறவிடப்படும்.
-thinakaran
Leave a comment