10,000 வருகைகளைக் கடந்து செல்லும் ஓர் வெற்றிப் பயணத்தில் ‘உங்கள் காத்தான்குடி’

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி (04-02-2012) அன்று உத்தியோக பூர்வமாக வெளியாகி உலகை வலம் வந்து கொண்டிருக்கும் ‘உங்கள் காத்தான்குடி’  இணையத்தளம், நேற்று அதாவது (01-04-2012) அன்று 10,000 வருகைகளைக் கடந்து ஓர் வெற்றிப் பணயத்தில் சென்று கொண்டிருப்பதை எமது சகோதரர்களுக்கும் இத்தளத்தின் அபிமான வாசகர்கள் மற்றும் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்!

உலகின் இணையத்தள வரலாற்றில் ஓர் திருப்புமுணையாக உதயம் பெற்ற ‘உங்கள் காத்தான்குடி’ இணையத்தளத்தின் மூலம் எமது நகரின் முக்கிய செயற்பாடுகளையும் தகவல்களையும் தினமும் அறிந்து கொள்வதில் ஆர்வமாய் இருக்கும் இலங்கை வாழ் மக்களுக்கும் மற்றும் கடல் கடந்து வாழும்  சகோதர்களுக்கும் ‘உங்கள் காத்தான்குடி’ உங்கள் அனைவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது.

அரசியல் சாயங்களுக்கு அப்பால் நின்று, பொதுநல நோக்கை மாத்திரம் கருத்திற்கொண்டு செயற்படும் ‘உங்கள் காத்தான்குடி’ இணையத்தளம், ஆரம்பம் முதல் இன்றுவரை ஒரே நிர்வாகத்தின் கீழ் தனித்தே செயற்பட்டு வருகின்றது என்பதையும், வேறு எந்த இணையத்தளங்களோ, வேறு எந்த சமூக-பொது நிறுவனங்களோ அல்லது ஊடகங்கள் / செய்திச் சேவைகளோ  எங்களுக்குப் பின்னணியில் இல்லை என்பதையும் உத்தியோக பூர்வமாக அறியத்தருகின்றோம்.

மாணவர்களம், பொதுஅறிவு, விளையாட்டு தகவல்கள் என்பவை  மென்மேலும் புதுப்பிக்கப்பட்டு வழங்கப்பட இருப்பதுடன் காத்தநகரின் பழைய, புதிய மற்றும் நடைமுறைத் தகவல்களும், உலக நடப்புக்களும் மெருகூட்டலுடன் இன்ஷா அல்லாஹ் தொடர்ந்தும் உங்கள் இதயங்களைத் தொட்டுச் செல்லும்  என்பதனையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

‘இது உங்கள் களம் – இணையங்களின் தனித் தளம்’

நன்றி – வஸ்ஸலாம்

என்றும் அன்புடன்,

இயக்குனர் மற்றும் நிர்வாகம்,

உங்கள் காத்தான்குடி

Published by

Leave a comment