வாகனங்கள் மீதான விலை அதிகரிப்பு: அத்தியாவசிய பொருட்களின் விலையில் தாக்கம் ஏற்படுத்தாது

தான்தோன்றித்தனமாக செயற்பட்டால் வர்த்தகர்கள் மீது நடவடிக்கை

வாகனங்கள் மீதான வரி அதிகரிப்பு அத்தியாவசியப் பொருட்களின் விலையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாதென உள்நாட்டு வர்த்தகம் மற்றும் கூட்டுறவுத் துறையமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நேற்று கூறினார்.

சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் நிதியமைச்சு மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி, வேன், டீசல் மற்றும் பெற்றோலில் இயங்க கூடிய ஹைபிரைட் கார் ஆகியவற்றின் வரியினை அதிகரித்திருந்த அதேவேளை மதுசாரம், சிகரெட் ஆகியவற்றின் விலைகளிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

இதனையிட்டு அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களினதும் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளனவென சில ஊட கங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக கேட்டபோதே, இச் செய்தி களில் எவ்வித உண்மையும் இல்லையெனக் கூறிய அமைச்சர், இதற்காக நுகர்வோர் அச்சமடைய வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டார்.

வாகனங்கள் மீதான வரி அதிகரிப்பு காரணமாக வாகனங்களின் விலைகள் உயரும். அதற்காக அந்த விலையதிகரிப்பை அத்தியாவசியப் பொருட்கள் மீது திணிப் பது நியாயமற்றது. சில வியாபாரிகள் இதனை காரணம் காட்டி தம்மிடமுள்ள பொருட்களை நினைத்தவாறு அதிக விலைக்கு விற்பார்களாயின் அவர்களுக் கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படு மெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான் டோவின் பணிப்புரையின் பேரில் நுகர்வோர் அதிகார சபையினால் நாட ளாவிய ரீதியில் சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் தரமில்லாத பொருட்கள், அதிக விலைக்கு விற்பனை செய்தவர்களென 40 ஆயிரம் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நிதியமைச்சு ஹைபிரைட் மோட்டார் வாகனங்களுக்கான 51 சதவீத வரியை 125 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெற்றோல் கார்களுக்காக 120 தொடக்கம் 189 வீதமாக இருந்த வரிகள் 200 முதல் 275 வீதம் வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.

டீசல் கார்களுக்காக 180 வீதம் தொடக்கம் 291 வீதம் வரை நிலவிய வரி சேர்ப்புகள் 250 வீதம் தொடக்கம் 350 வீதங்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏனைய டீசல் வாகனங்களுக்கு 112 தொடக்கம் 350 வீதம் வரை வரி சேர்ப்புகள் மேற்கொள்ளப்படும்.

அனைத்து சிகரெட் வகைகளினதும் விலைகள் ஒரு ரூபாவினால் அதிகரிக்கப் பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட பியர் லீற்றர்க்கான தீர்வை வரி 50 ரூபா வால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை பியர் லீற்றர் ஒன்றுக்கான தீர்வை வரி 5 ரூபாவாலும் ஏனைய மதுபானங்களின் விலைகள் லீற்றருக்கு 60 ரூபாவாலும் உயர்த்தப்பட்டுள்ளது.

-Thinakaran

Published by

Leave a comment