பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஜப்பானுக்காக உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அரசியல் தலைவர்கள் சிரேஷ்ட தொழில்நுட்ப வல்லூனர்கள் மற்றும் அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்தை நடத்தியுள்ளார்.
இவ்விஜயத்தின் போது- ஜப்பானின் கல்வி- கலாச்சார- விளையாட்டு- விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹீரோபுயூமி ஹிரேனோ- பாதுகாப்புப் பிரதியமைச்சர் மிட்ஸு சைமோஜோ- காணி- உட்கட்டமைப்பு- போக்குவரத்து மற்றும் சுற்றுலத்துறை பிரதியமைச்சர் க்யோசி சுஹிமா மற்றும் ஜப்பானி சர்வதேச ஒத்துழைப்பு தூதரகத் தலைவரின் ஆலோசகர் ஒஷிமா கென்சோ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மேலும் ஜப்பானின் முன்னாள் பிரதமரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் உட்பட பல முக்கிய அரசியல் உயர் பதவியாளர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பின் போது- கடந்த வருடம் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி அனர்த்தங்களின் போது இலங்கை வழங்கிய உதவி மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுன் இருநாடுகளும் சுமூகமாக இன்பகரமான உறவை நீண்டகாலமாக பேணிவருது குறித்தும் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவியளித்து வருகின்றமைக்கும்இ எண்ணற்ற சர்வதேச கருத்துரங்குகள் மற்றும் மகாநாடுகளில் ஜப்பான் இலங்கைக்கு ஆதரவு அளித்துவருகின்றமைக்கும் பாதுகாப்புச் செயலாளர் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
அத்துடன் இவ்வருடம் ஜப்பான் மற்றும் இலங்கைக்கான இருதரப்பு நீண்டகால உறவுகளின் 60 ஆண்டு பூர்த்தி விழா கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-news.lk
Leave a comment