டீசல், பெற்றோல் விலை 15 ரூபாவால் மீண்டும் உயரும்?

எரிபொருள் விலையை மீண்டும் ஒருமுறை அதிகரிக்க அனுமதி அளிக்குமாறு இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனம் (ஐஓசி) கனியவள அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

டீசல் மற்றும் பெற்றோல் என்பவற்றை தலா 15 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனம் (ஐஓசி) நிர்வாகப் பணிப்பாளர் சுரேஸ் குமார் அத தெரணவிடம் தெரிவித்தார்.
தற்போதைய எரிபொருள் விலையின் கீழ் நட்டம் ஏற்பட்டுள்ளதால் விலை உயர்வுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

-adaderana

Published by

Leave a comment