ஜோர்தானில் தொழில் புரியும் இலங்கை பணியாளர்களின் சம்பள உயர்வு குறித்து இலங்கை ஜோர்தான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இவ்விடயம் தொடர்பில், ஜோர்தான் சென்றுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா ஜோர்தானின் தொழில்துறை அமைச்சர் மஹர் அல் வாகட்டை நேற்று (31) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
சம்பள உயர்வு குறித்த கோரிக்கை ஒன்றை அமைச்சர் டிலான் பெரேரா ஜோர்தான் தொழில்துறை அமைச்சரிடம் கையளித்ததுடன் அந்தக் கோரிக்கைகை அவர் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜோர்தானில் பணிபுரியும் இலங்கையர்களில் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
-adaderana
Leave a comment