ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வலியுறுத்தியு ள்ளார். பிற நாடுகளில் தேவையான எண்ணெய் வளம் உள்ளது.
எனவே ஈரான் மீது தடை விதிப்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் குறிப்பிட்டார். மேலும், ஈரானிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவும், சீனாவும் தங்களது இறக்குமதி அளவைக் குறைத்துக் கொண்டுள்ளன.
ஈரானுக்குப் பதில் பிற நாடுகளிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எனவே ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்க வேண்டிய நேரமிது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியா, சீனா, தென் கொரியா, துருக்கி ஆகிய நாடுகள் அனைத்தும் ஈரானிடமிருந்தான தங்களது இறக்குமதியை குறைத்துக் கொண்டுள்ளன.
ஈரான் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் 11 நாடுகளுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. எண்ணெய் வர்த்தகம் தொடர்பாக ஈரானுக்கு விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கையும் எடுக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு செயலர் ஜே கார்னே தெரிவித்தார்.
-Thinakaran
![Panoramic-vew-of-Iran[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/04/panoramic-vew-of-iran1.jpg?w=300&h=199)
Leave a comment