நான்கு குழந்தைகளுக்கு அப்பாவான ஒசாமா: – கூறுகிறார் இளைய மனைவி!

அமெரிக்காவின் புகழ்பெற்ற உலக வர்த்தக மையத் தாக்குதலுக்குப் பின்னர் ஒன்பது வருடங்களை ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானிலேயே செலவழித்து வந்துள்ளார்.

இந்தக் காலப்பகுதியில் அவர் ஐந்து வீடுகள் மாறியுள்ளார். நான்கு குழந்தைகளுக்கு அப்பாவாகியுள்ளார். அதில் இரண்டு குழந்தைகள் பாகிஸ்தானின் அரச மருத்துவமனையில் தான் பிறந்துள்ளன.

இந்தத் தகவல்களை ஒசாமா பின்லேடனின் 30 வயது இளைய மனைவியான அமல் அஹமத் அப்துல் பதேஷ் பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார். பின்லேடனின் இளைய மனைவி யேமனில் பிறந்தவர்.

இவருடன் ஒசாமா வாழ்ந்த காலத்தில் தான் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. அமெரிக்கப் படையினரால் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட போது இவருக்கும் காலில் காயம் ஏற்பட்டது.

புனிதப் போர் வீரனான ஒசாமாவை 2000 ஆண்டில் திருமணம் செய்ததாகக் கூறுகின்றார் அவர். செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்கப் படைகளால் தீவிரமாகத் தேடத் தொடங்கிய காலத்தில் ஒசாமா பின்லேடன் வடகிழக்கு பாகிஸ்தானின் மலைகள் அதிகமுள்ள பிரதேசத்தில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார்.

பின்னர் பாகிஸ்தானின் சங்கால மாவட்டத்தில் ஒன்பது மாதங்களும், பிறகு 2003 ஆம் ஆண்டு இரண்டு வருடங்களாக ஹரிப்பூரிலும் கடைசியாக 2005 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அபோபதவாத் அதாவது அமெரிக்காவின் சீல் அதிரடிப் படையினரால் மே 2011 இல் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்திலும் வாழ்ந்து வந்திருக்கிறார்.

-manithan.com

Published by

Leave a comment