மீள்பார்வை இணையத்துக்கு அங்கீகாரம் !

இதுவரை 40 இணைய தளங்களுக்கு அனுமதி 

புதிதாக 13 இணைய தளங்களுக்கு இன்று ஊடக அமைச்சு அங்கீகாரம் வழங்கியதுடன் அவற்றின் ஆறு இணைய தளங்களுக்கான அனுமதிப் பத்திரங்களை அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத் துறை பதில் அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கையளித்தார்.

தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது சிராஜ் மஷ்ஹூரின் “meelparvai.net” என்ற இணையதளம் உட்பட ஆறு இணைய தளங்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் உடன் வழங்கப்பட்டன.

இன்றை தினம் அனுமதி வழங்கப்படும் 13 இணைய தளங்களோடு இது வரை 40 இணைய தளங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட தகவல் ஊடக அமைச்சின் செயலாளர் கணேகல தெரிவித்தார்.

-news.lk

Published by

Leave a comment