பிரித்தாணியாவில் உள்ள சிறிலங்கா இஸ்லாமிய போரம் (Srilanka Islamic Forum-SLIF) வருடா வருடம் நடாத்தும் இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கான 9வது மாநாடு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஜூன் மாதம் 23ம் 24ம் திகதிகளில் MARKFIELD, LEICESTER எனும் இடத்தில் நடைபெற உள்ளதாக இதன் ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
சிறுவர் நிகழ்ச்சிகள், இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு, பெண்களுக்கான நிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு வைபவம் என அசத்தும் இம் மாநாட்டுக்கு குடும்ப சகிதம் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்கப்பட்டிருக்கின்றது. தங்களது வேலைத் தளங்களில் இத்தினங்களில் விடுமுறையைப் பெற்றுக் கொள்ளும் முகமாக முன்கூட்டியே குறுந்தகவல் மூலமான செய்திகள் பிரித்தாணியாவில் வாழும் இலங்கையின் சகோதர சகோதரிகளுக்கு தற்பொழுது அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment