இலங்கைக்கு அமெரிக்கா விடுத்துள்ள கடுமையான சமிக்ஞை!

இலங்கையில் நிலையான சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு, கடுமையான சமிக்ஞை ஒன்றை சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா அனுப்பியுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று (29) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் இலங்கை தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது,

உண்மையான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் மூலமே நிலையான அமைதியை எட்ட முடியும் என்ற கடுமையான சமிக்ஞை ஒன்றை இலங்கை அரசுக்கு அனைத்துலக சமூகத்துடன் இணைந்து அமெரிக்கா அனுப்பியுள்ளது. அதற்கு உதவ அனைத்துலக சமூகம் தயாராகவே உள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், பொறுப்புக்கூறலுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், புதிய தீர்மானத்தின் மூலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஊக்குவிப்பை வழங்கியுள்ளது.

இந்த இலக்கை அடைவதற்கு இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்கா கடமைப்பட்டுள்ளது. என அந்த அறிக்கையில் இலங்கை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

-adaderana

Published by

Leave a comment