13 இணையங்களுக்கு அரசாங்கம் அனுமதி

மேலும் 13 இணையத்தளங்கள் தகவல் ஊடகத்துறை அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டன. இவற்றுக் கான அனுமதிப்பத்திரங்கள் பதில் தகவல் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவினால் தகவல் திணைக்களத்தில் வைத்து நேற்று கையளிக்கப்பட்டன.

ஏற்கனவே 27 இணையத் தளங்களுக்கு அனுமதிப் பத் திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பி. கனேகல விண்ணப்பம் செய்யும் சகல இணையத் தளங்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என்றார். கடந்த நவம்பர் மாதம் முதல் இணையத்தளங்கள் பதியப்படுகின்றன.

கடந்த ஒரு மாத காலத்தில் ஜனாதிபதியையும் அவரது குடும்பத்தையும் விமர்சித்து பல இணையத்தளங்களில் பொய்யான செய்திகள், பிரசுரிக்கப்பட்டன. வெப்தளங்கள் கட்டுப்படுத்த முடியாத அளவில் உள்ளன. பொய்ப் பிரசாரம் செய்யும் இணையத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா இங்கு தெரிவித்தார்.

–தினகரன்

Published by

Leave a comment