1000 பாடசாலை திட்டத்தையும் உள்ளடக்கி ஆசிரிய இடமாற்றம்

புதிய இடமாற்ற முறைமைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஆயிரம் பாடசாலை திட்டத்தையும் உள்ளடக்கியதாக ஆசிரிய இடமாற்றத்திற்கு புதிய முறைமையொன்றை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியது.

கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன சமர்ப்பித்த பிரேரணைக்கமைய மாகாண சபைகளையும் தேசிய பாடசாலைகளையும் உள்ளடக்கியதாக இந்த இடமாற்ற முறைமை மேற்கொள்ளப்படும்.

நாடு பூராகவும் உள்ள 342 தேசிய பாடசாலைகளில் 10 வருடங்களாக பணிபுரியும் ஆசிரியர்கள் அந்த பாடசாலைகள் தூர இடங்களில் இருப்பதால் இடமாற்றத்தின் போது அசெளகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

ஆசிரியர் இடமாற்றத்தை வருட இறுதியில் முன்னெடுக்கவும் தேவைக்கேற்ப இடமாற்றம் வழங்கும் அதிகாரத்தை அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

–தினகரன்

Published by

Leave a comment