-MJ
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் உல்லாசப் பிரயாணிகளின் பங்களிப்பு ஓர் விசேட அம்சமாக கணிக்கப்படுகின்றது. சுமார் 30 வருட இலங்கை கிரிக்கட் சரித்திரத்தில் இவ்வளவு பெருந்திரளான வெளிநாட்டவர்கள் இவ்வளவு சுதந்திரமாக இந்த போட்டியை பாரத்து இரசிக்கின்றமை இலங்கையின் சுமுகமான நிலையை உலகுக்கு எடுத்துக் காட்டும் ஓர் செயற்பாடாகவே இப்போட்டியின் பிரதிபலிப்பு அமைகின்றது.
கடந்த 30 வருடகால யுத்தத்தின் பின்னர் இலங்கைக்கான சுற்றுலாப் பிரயாணிகளின் வருகை பலமடங்கு அதிகரித்திருக்கின்றன. யுத்தகாலப்பகுதியில் பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளிநாட்டினருக்கு தடை விதிக்கப்பட்டிருந்த வட கிழக்குப் பிரதேசங்கள் தற்பொழுது உல்லாசப் பிரயாணிகளால் ஈர்க்கப்பட்டு வருகின்றன.
மூன்றாவது நாளாக தொடரும் இப்போட்டிக்கு இலங்கை இரசிகர்களை விட இங்கிலாந்து இரசிகர்களின் வருகையும் அவர்களது அதரவுகளும் காலி மைதானத்தை சிறப்பித்துக் கொண்டிருக்கின்றன. இங்கிலாந்தின் உள்ளுர் கழகங்களினதும் நகரங்களினதும் பெயர்களைத் தாங்கிய இங்கிலாந்து கொடிகள் காலிக் கோட்டைச் சுவரை ஆக்கிரமித்திருக்கின்றன.
வெயிலில் சூரியக்குளியலில் மகிழ்ந்து இப்போட்டியினை பார்த்து இரசிக்கும் இங்கிலாந்து இரசிகர்களுக்கு பின்னணி இசையாக ‘பப்பரப்பா’ இசை வாத்தியங்களும் கரகோசங்களும் ‘பைலா’ நடனங்களும் மகிழ்வித்துச் செல்கின்றன. இவர்களின் ஆராவாரங்களையும் களியாட்டங் களையும் பார்க்கும் போது, இப்போட்டி இங்கிலாந்திலா நடைபெறுகின்றது என சில வேளைகளில் சிந்திக்கத் தோன்றுகின்றது.
![141909375-jpg_090139[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/03/141909375-jpg_0901391.jpg?w=300&h=197)
![England-fans-Sri-Lanka-test[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/03/england-fans-sri-lanka-test1.jpg?w=300&h=180)

Leave a comment