நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்
கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானபீடத்தின் மாணவர்களும் சேவையாளர்களும் இணைந்து முதன்முதலாக கிழக்கு மாகாணத்தில் மாபெரும் மருத்துவ கண்காட்சி ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை காலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானபீடத்தின் பீடாதிபதி கே.இ.கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க பிரதம அதிதியாகவும் சிறப்பு அதிதியாக கிழக்குப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி மு.கோவிந்தராஜாவும் கலந்துகொண்டனர்.
சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானபீடத்தின் அரசடி வளாகத்தில் நோயற்ற எதிர்காலத்துக்காகவும் நோய்களுக்கு ஈடுகொடுத்தல் என்னும் தொனிப்பொருளில் இந்த கண்காட்சி ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
14 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் மருத்துவதுறை சார்ந்த அனைத்து பிரச்சினைகளையும் உள்ளடக்கியதாகவும் படையினர்,பொலிஸார்,மனித உரிமைகள் நிலையம்,முதலுதவி போன்றவற்றையும் கண்காட்சி உள்ளடக்கியுள்ளது.
மனித உடலின் அமைப்பு,அதன் தொழிற்பாடுகள் ஆகியனவற்றைக்கொண்டு மனித உடல் இயக்கம் பெறுகின்றன என்பது தொடர்பிலான விரிவான செயன்முறை காட்சிகளைக்கொண்டதாக அமைந்துள்ளன.
இன்று காலை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியானது 31ஆம் திகதிவரையில் இடம்பெறவுள்ளது.
-adaderana
Leave a comment