* சுகாதார அமைச்சு தகவல்
* பொதுமக்களுக்கு எச்சரிக்கை
நாடு பூராகவும் சுமார் 40 ஆயிரம் போலி மருத்துவர் கள் இருப்பதாக முறைப் பாடு கிடைத்துள்ளதால் அத்தகைய மருத்துவர்கள் குறித்து மிகவும் கவன மாக இருக்குமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இத்தகைய மருத்துவர் கள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்தது.
மருத்துவத் துறைக்கு தகுதியற்ற மற்றும் வேறு மருத்துவ முறையை கற்று மேலைத்தேய சிகிச்சை முறை மூலம் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் நபர்கள் குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
மருத்துவர்களாக தம்மை காட்டிக் கொண்டு நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் இத்தகைய நபர்கள் குறித்து அமைச்சிற்கு தினமும் முறைப்பாடு கிடைத்து வருகிறது. அலங்காரப் பொருட்கள் மற்றும் மருந்து ஒழுங்குபடுத் தல் சட்டத்தின் பிரகாரம் இலங்கை மருத்துவச்சபையில் பதிவு செய்யாது நோயாளர்களுக்கு கிசிச்சை அளிப்பது அல்லது மேலைத் தேய மருந்துகளை வழங்குவது, மருந்துகளை அருகில் வைத்திருப்பது என்பன தண்டனைக்குரிய குற்றமாகும்.
வேறு மருத்துவ முறையை பயின்ற நபர்கள் மேலைத்தேய முறைப்படி சிக்ச்சை அளிப்பதும் தண்டனைக்குரிய குற்றமென அமைச்சு கூறியது. இத்தகைய திருட்டு மருத்துவர்கள் பொதுமக்களின் வாழ்க்கையுடன் விளையாடுவது குறித்து கவனம் செலு த்திய சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இத்த கைய போலி மருத்து வர்களை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அலங் காரப் பொருள் மற்றும் மருத்துவ ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு பணித்துள்ளார்.
இதன்படி ஹிம்புட்டானை பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலில் வேறு மருத்துவ முறை பயின்ற இருவர் மேலைத்தேய முறையில் சிகிச்சை அளித்தது தொடர்பாக கைது செய்யப் பட்டனர். இவர்களிடமிருந்து மேலை த்தேய மருந்துகளும் மீட்கப்பட்டன. இங்கு தகுதியான நபர்கள் இல்லாமல் மருத்துவ ஆய்வு கூடம் ஒன்று நடத்தப்பட்டு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்ப டுகிறது. இத்தகைய போலி மருத்துவர்கள் குறித்து அறிவிக்குமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களை கோரியுள்ளது.
-தினகரன்
Leave a comment