தன்னைப் பற்றிய வதந்திகளை பரப்புவதன் மூலம் விற்பனையை அதிகரித்துக்கொள்வதற்காக தனது பெயரை ஊடகங்கள் பயன்படுத்த விரும்பினால் அப்படி செய்துகொள்ளட்டும் என பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறினார். பண்டைய மன்னர்கள் காலத்தில்; வழங்கப்பட்ட தண்டனைகளுடன் ஒப்பிடும்போது கைகால்களை உடைப்பது குறைந்த தண்டனையாகும் என்பதை நான் கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
‘ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு எனக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக கேள்விப்பட்டேன். ஆனால், அது தொடர்பாக எனக்கு முறைப்படி அறிவிக்கப்படவில்லை. ஊடகங்கள் தமது விற்பனையை அதிகரித்துக் கொள்வதற்காக பொய்களை பிரச்சாரப்படுத்துகின்றன. அவர்கள் மேர்வின் சில்வாவை விற்க முடிந்தால் விற்கட்டும்.
தெற்கை சேர்ந்தவன் என்ற வகையில், நான் இந்த நாட்டிற்கு துரோகம் செய்ய மாட்டேன். கைகால்களை உடைப்பேன் என நான் எச்சரித்தால், பண்டைய மன்னர்கள் காலத்தில்; வழங்கப்பட்ட தண்டனைகளுடன் ஒப்பிடும்போது கைகால்களை உடைப்பது குறைந்த தண்டனையாகும் என்பதை நான் கூற வேண்டும்.
நாட்டை காட்டிக்கொடுக்கும் துரோகிகளுக்கு பண்டைய மன்னர்கள் கருணை காட்டவில்லை’ என சமய வழிபாடுகளில் கலந்துகொள்வதற்காக களனி விகாரைக்கு சென்றிருந்த அமைச்சர் மேர்வின் சில்வா, அங்கு செய்தியாளர்களை சந்தித்தபோதே இவ்வாறு கூறினார்.
‘வெளிநாட்டவர்களின் டொலர்களில் தங்கியுள்ள எந்த நபரும்; சிங்கள சமூகத்தை நாசமாக்குவதற்கான ஊத்தை வேலைகளை செய்வதற்கு நான் அனுமதிக்கப்போவதில்லை. ஏனைய அரசாங்கங்கள் பயங்கரவாத இயக்கங்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியபோது, இந்நாட்டை பயங்கரவாதத்திலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காப்பாற்றினார்’ எனவும் அவர் கூறினார்.
-Tamilmirror
Leave a comment