ஆமிரின் போட்டித் தடையை எதிர்த்து மேன்முறையீடு செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் அறிவுரை

இங்கிலாந்தில் 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஸ்பொட் ஃபிக்சிங் சம்பவம் தொடர்பாக ஐந்து வருடகால போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிரை அத்தடையை எதிர்த்து மேன் முறையீடு செய்யுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் திரும்பியதை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரைச் சந்தித்திருந்தார் மொஹமட் ஆமிர்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷாகா அஷ்ரப் – மொஹமட் ஆமிருக்கு விதிக்கப்பட்டுள்ள 5 வருடகாலப் போட்டித்தடை அதிகமானது எனத் தெரிவித்தார்.

“5 வருட காலத் தடை அவருக்கு அதிகமானது எனக் கருதுகிறேன். அதை எதிர்த்து மேன்முறையீடு செய்வது ஆமிரைப் பொறுத்தது. ஆனால் அதை எதிர்த்து மேன்முறையீடு செய்ய நான் பரிந்துரை செய்கிறேன். அவரது வயதையும், அவரது திறமையையும் கருத்திற்கொண்டு அவருக்கு இரக்கம் காட்டப்பட வேண்டும் எனக் கருதுகிறேன்” என ஷாகா அஷ்ரப் தெரிவித்தார்.

-தினகரன்

Published by

Leave a comment