அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அமைச் சுப் பதவியிலிருந்து இரா ஜினாமா என்ற தலைப் பிலே வெளியான செய்தி குறித்து தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் பதில் பொது முகாமையாளர் ஏ.சீ.எச்.முனவீர விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட் டுள்ளதாவது,
தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் ரஞ்சித் எல்லேகலவை அப்பதவியில் இருந்து அகற்றுவதற்கு ஏற்பாடு இருப்பதாக, சில ஊடகங்களில் பிரசுரமான செய்திகள் முழுமையாகவே தவறானவை.
நேற்று 27ஆம் திகதி தேசிய பத்திரி கைகளில் கால்நடைவள, கிராம அபி விருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண் டமான் ஜனாதிபதியிடம் தமது இரா ஜினாமா கடிதத்தை ஒப்படைத் திருப்பதாகவும், சம்பந்தப்பட்ட சபை யின் தலைவரை மீண்டும் சேவையில் அமர்த்த எடுத்த தீர்மானம் அதற்கு காரணமென தெரிவிக்கப்பட்டிருந் தது. இது முழுமையாகவே ஆதாரமற்றதென ரஞ்சித் எல்லேகல கூறியுள்ளார். கெளரவ அமைச்சரும், தலைவரும் சுமுகமாக நிறுவனத்தில் பணிகளை புரிந்துகொண்டிருக்கி ன்றனர்.
தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை 2011ஆம் ஆண்டில் 248 மில்லியன் ரூபாவை இலாபமாகப் பெற்றது. இந்த சபை விரிவாக்கப்பட்டதன் பின் பெறப்பட்ட ஆகக்கூடிய இலாபம் இதுவாகும்.
உள்ளூர் பால் உற்பத்தியுடன் அதற்குரிய திட்டங்களையும் அபிவிருத்திக்காக பல்வேறு திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. அவை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. நாட்டின் கால்நடைவளதுறை தொடர்பாக நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
20 வருடங்களுக்குப் பின்னர் அவுஸ்திரேலியாவிலிருந்து பசுமாடுகளை இறக்குமதிசெய்ய இந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. இந்த மாடுகள் விரைவில் இலங்கைக்குக் கொண்டுவரப்படும். இதன்மூலம் நாட்டின் கால்நடை வளத்துறை மேன்மைகாணும்.
இச்சபை நவீனமயப்படுத்தப்படு கிறது. நாடு முழுவதும் விற்பனைச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பழையவை முன்னேற்றம் செய்யப்படுகின்றன. தனியார் துறையுடன் தெளிவான போட்டியை ஏற்படுத்தி நாட்டின் பால் உற்பத்தியில் வர்த்தக சந்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு உயர் ரக மாடுகள் வழங்கப்படுகின் றன. பசுமாடுகளின் இனப்பெருக்கம் விடயத்திலும் கரிசனை செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசதுறையில் சுதந்திரமான ஒரு நிறுவனமாக இந்த நிறுவனம் எழுந்து நின்றுள்ளது.
மஹிந்த சிந்தனையை யதார்த்தமாக்கி பாவனையாளர்களுக்கு சுத்தமான பாலை வழங்கும் முன்னணி நிறுவனமாக இச்சபை கெளரவத்தை வென்றுள்ளது. இந்த நிலைமையை அடைவதற்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமா னின் வழிகாட்டலும், தலைவர் உட்பட சபை உறுப்பினர்களும் சகல ஊழியர்களும் வழங்கிய அர்ப்பண சிந்தையுடனான பங்களிப்புமே காரணமாகும் இவ்வாறு சபையின் பதில் பொது முகாமையாளர் ஏ.சி.எச். முனவீர அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-தினகரன்
Leave a comment