-MJ
இவ்வருடம் இலங்கையில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியின் அனுமதிச் சீட்டுக்கள் நேற்றைய தினத்திலிருந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் தலைமை நிர்வாகியான ஹாருன் லோகட் தலைமையில் ‘Galle Face Green’ இல் நேற்று இடம்பெற்ற இவ்வைபவத்தில் இலங்கை கிரிக்கட் தலைவர் உபாலி தர்மதாச உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
T20 உலகக் கிண்ணப் போட்டிக்கான முதலாவது நுழைவுச் சீட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ கொள்வனவு செய்தார். கொழும்பு, பல்லேகல மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் நடைபெறும் இப் போட்டியானது, ஆசிய நாடொன்றில் நடைபெறும் முதலாவது T20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டி என்பதும் ஓர் சிறப்பம்சமாகும்.
தலை நகரிலும் ஏனைய இடங்களிலும் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள விற்பனை நிலையங்களில் தங்களது தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு என்பவற்றைச் சமர்ப்பித்து இந்நுழைவு சீட்டுக்களை பெற்றுக் கொள்ள முடியும். ஆரம்பச் சுற்றுப் போட்டிகளின் நுழைவுச் சீட்டின் விலை 0.25 அமெரிக்க டொலர் பெறுமதியானதாகவும் இறுதிச் சுற்றுக்கள் 2.50 – 45 அமெரிக்க டொலர் வரையான பெறுமதிகளைக் கொண்டு அமைந்துள்ளன.

Leave a comment