12 ஆவது தோஹா மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தோஹா கட்டாரின் அமீர் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையில் உள்ள கட்டார் தூதுவர் செய்யத் அப்துல்லாஹ் அல்- மன்சூர் – கட்டார் அமீரின் அழைப்பை இன்று ஜனாதிபதியிடம் கையளித்தார்.
இந்த அழைப்பை ஏற்ற ஜனாதிபதி இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நீண்டகால பரஸ்பர நல்லுரவை நினைவுபடுத்தியதோடு விசேடமாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கட்டார் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.
-news.lk
Leave a comment