-MJ
உலக கிண்ண வரலாற்றில் பல புதிய மாற்றங்களுடன் நவீன தொழிநுட்பத்திற்கு அமைவாக நடாத்தப்பட்ட Benson Hedges World Cup -1992 உலகக் கிண்ணப் போட்டியானது கிரிக்கட் வரலாற்றில் ஒரு திருப்புமுணையை அன்று ஏற்படுத்தி இருந்தது. அவுஸ்திரேலியா-நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளும் இணைந்து நடாத்திய உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டி 25-03-1992 அன்று உலகப் புகழ்பெற்ற அவுஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் இடம் பெற்றது.
பலம் பொருந்திய இங்கிலாந்து அணியை 22 ஓட்டங்களால் தோற்கடித்து இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி உலகக்கிண்ணத்தை வென்றது. அப்போதைய பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்கிய இளம் வீரர்களான சயீட் அன்வர் மற்றும் வகார் யூனுஸ் ஆகியோர் காயம் காரணமாக இத்தொடரில் பங்குபற்றாமை பாகிஸ்தான் அணியைப் பெரிதும் பாதித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. உலகக் கிண்ணத்தை வென்று இருபது வருடங்களைத் தாண்டிய பாகிஸ்தான் அணியின் வரலாற்றில் இம்ரான்கான் என்றும் புகழ்மிக்க ஒரு வீரனாகவே இன்றும் போற்றப்படுவது அது இம்ரானுக்குரிய ஓர் தனிச்சிறப்பு என்பதை உலக கிரிக்கட் இரசிகர்கள் மறக்கமாட்டார்கள்!
Leave a comment