இலங்கை வானொலி தமிழ் சேவை வரவாற்றில் மறக்க முடியாக அறிவிப்பாளராக கடமை புரிந்த அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சன்முகம் அவர்கள் சுகவீனமுற்றிருந்த நிலையில் யாழ்ப்பானத்தில் இன்று காலாமானார்கள். ‘வானொலிக் குயில்’ என அழைக்கப்படும் இவர் ‘பொங்கும் பூங்குணல்’ நிகழ்ச்சியை திறம்பட அக்காலத்தில் தொகுத்து வழங்கி இரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். கம்பீரக் குரலில் இனிமையாக காலை சூரியக் கதிர்களுடன் கலந்து வரும் இவரது குரல் இவருக்கே நிகர். இறக்கும் போது இவருக்கு வயது 72.
Published by
Leave a comment