–பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் மனைவி பெற்ற கடன் குறித்தும் பிரஸ்தாபம்-
செலிங்கோ புரொபிட் செயரிங் நிதி நிறுவனத் தில் வைப்பீடுகளைச் செய்திருந்து அவற்றை இன்று வரைக்கும் மீளப்பெற முடியாமல் தவிக் கும் ஆயிரக்கணக்கான பெண்களைக் கொண்ட கூட்டமைப்பினர் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் கௌரவ திஸ்ஸ கரலியத்த அவர்களுக்கு தமது அவல நிலையை விளக்கி கடந்த 15ம் திகதி நீண்ட கோரிக்கைக் கடித மொன்றைஅனுப்பி வைத்துள்ளனர்.
இலங்கைப் பத்திரிகைகளில் மிக முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கப்பட்டுள்ள அக்கடிதம், மேற் படி நிதிநிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப் பட்ட மக்களின் விவகாரத்தில் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் yourkattankudy.com வாசகர்களினதும், பாதிக்கப்பட்ட பெண் வைப் பீட்டாளர்களினதும் பார்வைக்காக இங்கு மொழி யாக்கம் செய்யப்பட்டு பிரசுரிக்கப்படுகின்றது.
‘பெண்கள் தின விழாக்களும், பெண் களை வலுவூட்டுதலும்’ எனும் தலைப்பில் மகளிர் விவகார அமைச்சர் கௌரவ திஸ்ஸ கரலியத்த அவர்களுக்கு எழுதப்பட்டுள்ள அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கௌரவ அமைச்சர் அவர்களே!
கடந்த சர்வதேச பெண்கள் தினத்தைக் குறிக் கும் முகமாகத் தாங்கள் பெண்களின் துயர் களைத் துடைத்து அவர்களை வலுவூட்டுவது தொடர்பாக வெளியிட்ட அறிக்கைளும் தங்க ளது உரைகளும் எமக்கு மிக்க மகி;ச்சியைத் தருகின்றன. பெண்களின் துயர்களைத் துடைப் பது தெடர்பில் தங்களது வார்த்தைகளை நிஜ மாக்குவதற்கான ஒரு பொன்னான சந்தர்ப்பம் தங்கள் முன் இப்போது இருப்பதாக நாம் நம்புகின்றோம்.
செலிங்கோ புரொபிட் செயாரிங் என்னும் இஸ் லாமிய நிதி நிறுவனத்தின் முதலீட்டாளர்களா கிய நாம் இதைத் தங்களுக்கு எழுதுகிறோம்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கiளில் மிகக் கணிசமான தொகையினராக பெண்களே இருக்கின்றார்கள். அவர்களுடைய முதலீடுக ளின் மொத்தத் தொகை ஏறத்தாழ ரூபா 600 மில்லியன்களாகும். (அதாவது 60 கோடி ரூபாவாகும்)
நிதி நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் இந்த நிறுவனத்திலிருந்து கடந்த 2009ம் ஆண்டு முதல் எமது வைப்பீட்டுத் தொகைகளையோ அல்லது எந்த விதமான இலாபத் தொகை களையோ நாம் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றோம்.
இந்நிறுவனத்தின் முகாமைத்துவ சபையுடன் நாம் கடுமையாக வாதாடியதைத் தொடர்ந்து இந்த நிறுவனமானது செலிங்கோ கூட்டு நிறு வனத்தின் சில கம்பெனிகளுக்கும், அத்தோடு குறிப்பிட்ட தனியாள் ஒருவருக்குமாக எமது மொத்த வைப்பீட்டுத் தெகையினைக் கடனாக வழங்கியுள்ளார்கள் என்பதனை நாம் அறிந்து கொண்டோம்.
இவ்வாறு வழங்கப்பட்ட பெருந்தொகைக் கடன் களைப் பெற்றுக் கொண்டவர்களினால் அத் தொகை மீளளிக்கப்படாத நிலையில் நாங்கள் எவ்வித கொடுப்பனவுகளும் இன்றி மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருக்கின்றோம்.
மீளச் செலுத்தப்படாத மொத்தக் கடன் தொகை யில் பின்வரும் தொகைகள் மிகவும் கணிசமான தொகைகளாக உள்ளன.
1. பைனான்ஸ் அன்ட் கெரண்டி லிமிட்டெட் – 240 மில்லியன் ரூபா.
2. சஸ்ஸெக் கொலிஜ் – 170 மில்லியன் ரூபா.
3. திருமதி றமீஸா சஹாப்தீன் (பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் மனைவி) – 140 மல்லியன் ரூபா.
கௌரவ அமைச்சர் அவர்களே!
மேலுள்ள மூன்று தொகைகளும் மொத்தமாக எமக்கு வரவேண்டியுள்ள தொகையில் 85 சத வீதமானதாகும் என்பதை நீங்கள் புரிந்து கொள் வீர்கள். இந்நிலையிலேயே இத்தொகைகளை மிளப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு குழுவாக இணைந்து நாங்கள் குறித்த நிதி நிறுவனத் துடன் போராடி வருகின்றோம்.
கௌரவ அமைச்சர் அவர்களே!
எங்களுக்குச் சேரவேண்டிய இப்பெருந்தொகைப் பணத்தில் ஒரு தனியாளாக அதிக தொகைப் பணத்தைச் செலுத்த வேணடியிருப்பது திருமதி றமீஸா சஹாப்தீன் என்பதனை நீங்கள் அவதா னிக்க முடியும். திருமதி றமீஸா சஹாப்தீன் என்பவர் கௌரவ பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களின் மனைவியாகும்.
கடந்த 2004ம் ஆண்டில் தனது கணவரான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா என்பவரினால் வழங்கப்பட்ட தனிநபர் உத்தரவாதத்தின் அடிப் படையில் ரூபா 93 மில்லியன் கடன் இந்த செலிங்கோ நிதி நிறுவனத்தினால் திருமதி றமீசா சஹாப்தீனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இக்கடனைப் பெற்றுக் கொள்வதற்காக வழங் கப்பட்ட ஆவணங்களில் திரு. ஹிஸ்புல்லா அவர்கள் தனது மனைவி இக்கடனைச் செலுத் தாத பட்சத்தில் அதனைத் தான் பொறுப்பேற்றுச் செலுத்துவதாக வழங்கியிருக்கும் உத்தரவாதக் கடிதம் முக்கியமானதாகும். (அதன் பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)
கௌரவ அமைச்சர் அவர்களே!
தங்களது சேமிப்புக்களை இழந்து தவிக்கும் வைப்பீட்டாளர்களில் விதவைகள் இருக்கின்றார் கள். தங்களின் கணவர்மார் வாழ்நாள் முழுவ துமாக உழைத்து தமக்காகச் சேமித்தவை களையே இவர்கள் இப்போது இழந்து நிற்கின் றார்கள். அதேபோல் பாதிக்கப்பட்ட வைப்பீட் டாளர்களில் இளம் யுவதிகளும் அடங்குகின் றனர். தமது திருமணத்திற்காக அவர்களின் பெற்றோர் சேமித்து வைத்திருந்தவைகளை இழந்து இவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.
தமது பிற்கால நிம்மதியான வாழ்வுக்காக தமது கணவர்மார்களினால் விட்டுச் செல்லப்பட்ட கணிசமான தொகை சேமிப்புக்கள் இருந்தும்கூட அவற்றை இன்று இழந்து விட்ட நிலையில் இவ்விதவைப் பெண்கள் மிகவும் மோசமான வறுமையில் வாடுவதோடு சிலர் பிச்சையெடுக் கும் நிலைக்குக்கூடச் சென்றுள்ளனர்.
அதுபோலவே தமது இளம் பெண் மக்களுக்காக சேமித்து வைத்திருந்தவைகளை இழந்து விட்டு நிற்கும் பல பெற்றோர்கள் தமது பெண்மக்க ளின் திருமணங்களை முடித்து வைக்க முடியா மல் திணறிக் கொண்டிருக்கின்றார்கள்.
இ;நிலையில் தாம் மீளச் செலுத்துவதாக உறுதி யளித்த அப்பெருந்தொகைக் கடன் பணத்தை மாதாந்தத் தவணை அடிப்படையிலாவது பிரதி யமைச்சர் ஹிஸ்புல்லா செலுத்துவாராயின் அது எமது ஏழை வைப்பீட்டாளர்களுக்கு பெரும் ஆறுதலாக அமையும்.
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களும், அவ ரது மனைவியும் செலுத்த வேண்டிய தொகை யாக ரூபா 143 மில்லியன் இன்று நிலுவையாக இருக்கின்றது.
இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் சார்பில் பிரதியமைச்சர் ஹிஸ் புல்லா அவர்களை நாம் பல முறை அணுகி னோம். ஆனால் எங்களது கோரிக்கைகளை முற்றாக நிராகரித்து விட்ட அவர் தான் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தப் போவ தில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றார்.
இங்கு கவலையுடன் சுட்டிக்காட்ட வேண்டிய விடயம் என்னவென்றால், பிரதியமைச்சர் ஹிஸ் புல்லா நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்தும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல ரும் இதில் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர் என்பதாகும்.
கௌரவ அமைச்சர் அவர்களே!
இந்த சர்வதேச பெண்கள் தின நினைவு நட வடிக்கைகளை மேற்கொள்ளும் தருணத்தில் பெண்களின் முன்னேற்றம் தொடர்பான உங் களது வார்த்தைகளை அர்த்தபூர்வமானதாக்கி பெண்களுக்கான ஒரு நல்ல வரலாற்று மாற்றத் தினை செய்யக்கூடிய வாய்ப்பானது உங்கள் முன்னாலுள்ளது.
உங்களது அரசியல் சகாவும், பிரதியமைச்சரு மான ஹிஸ்புல்லாவிடமிருந்து எங்களது பணத் தினை மீளப் பெற்றுத் தருவதன் மூலம் இதனை நீங்கள் கண்டிப்பாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு தங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இந்த நிதி மோசடியில் பாதிக்கப்பட்ட ஏழைப் பெண்களுக்கு நீங்கள் செய்கின்ற பேருதவியாக அது அமையும். பெண்களின் வாழ்வு நிலையை உயர்த்துவதற்காக தங்களின் அமைச்சு பல் வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்ற நிலையில் எமது வைப்பீடுகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் நீங்கள் நேரடி யாகத் தலையிட முடியுமெனில் அது உங்களது அமைச்சின் திட்டங்களையும் உண்மையான அர்த்தபூர்வமானதாக மாற்றும் என்பது மட்டு மின்றி பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோரின் பிரார்த்தனைகளையும் அது உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும்.
கௌரவ அமைச்சர் அவர்களே!
உங்களது நேரடித் தலையீட்டின் மூலமாக எமது இப்பணிவான வேண்டுதலை ஏற்று எங்க ளுக்கு உரிய நிவாரணத்தைப் பெற்றுத் தருவீர் கள் என நம்புகின்றோம் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a comment