பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி சேவை வெளியிட்ட இலங்கையின் கொலைக் களங்கள் – தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள் எனும் காணொளிக்கு பதிலளிக்கும் வகையில் உத்தியோக பூர்வ காணொளி ஒன்றை இலங்கை வெளியிட்டுள்ளது.
இக்காணொளியினை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது.
“பயங்கரவாத நிழல்கள்: சேனல் 4 க்கு பதில்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த காணொளியில் இறுதிக் கட்ட போர் நடவடிக்கைகளின் போது நிகழ்ந்த இரண்டு முக்கிய சம்பவங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த ஆவணப்படத்தில் புலிகள் தங்கள் இயக்கத்திற்கு வலுக்கட்டாயமாக சிறுவர்களை சேர்த்துக் கொண்டமை பற்றியும் விளக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-news.lk
Leave a comment