கொழும்பு நூதனசாலை கொள்ளைச் சம்பவம்:
கொழும்பு நூதனசாலையில் இருந்து தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த வாள்கள் காணாமல் போன சம்பவத்தை யடுத்து அன்றைய தினம் கடமையில் ஈடுபட்டிருந்த காவலாளி, இறுதியாக பொருட்களை பரீட்சித்த அதிகாரி, உதவி அதிகாரி அடங்கலான சகல பாது காப்பு அதிகாரிகளும் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய மரபுரிமை அமைச்சர் ஜகத் பாலசூரிய தெரிவித்தார்.
இதேவேளை, மேற்படி சம்பவத்தையடுத்து மூடப்பட்டிருந்த நு¡தனசாலையின் ஒரு பகுதி நேற்று (21) முதல் மீண்டும் திறக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேற்படி சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், இந்த சம்பவம் தொடர்பாக உள்ளக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சின் செயலாளரின் தலைமையில் நேற்று நடத்தப்பட்ட கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இதன்படி, அன்று கடமையில் இருந்தவர்களை தற்காலிகமாக இடைநிறுத்தவும் நூதனசாலையின் முதலாம் மாடியை மடடும் இன்று (22) திறக்கவும் தீர்மானிக்க்பபட்டது. திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு அடங்கலான விடயங்களை அறிய நூதனசாலை பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் இதன் அறிக்கை கிடைக்கும்.
நூதனசாலையின் பாதுகாப்பு தொடர்பிலும் பல முடிவுகள் எடுக்கப்பட்டன. விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
-தினகரன்.
Leave a comment