இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் தொடரும் உள்நாட்டு-வெளிநாட்டு அழுத்தங்களும்

ஓர் விசேட அரசியல் கண்ணோட்டம்

-MJ

இந்தக் குற்றச் செயலானது இலங்கையில் தமிழ் மக்கள் மீது மாத்திரமே மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக ஒரு பக்கச்சார்பான கருத்தை புலி ஆதரவு ஊடகமான சனல்-4 முன்வைத்திருக்கின்றமையும் புலிகளால் பல்லாயிரம் முஸ்லிம்களின் உயிர்கள் காவப்பட்டது முழுப் பூசனிக்கையை சோற்றில் மறைத்து மேற்படி ஊடகம் செயல்படுவதும் வேடிக்கையான ஒன்றாகும்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் காரணமாக தமிழ் மக்களுக்கு எதிராக சுமார் முப்பது வருடங்களாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போரில் இலங்கை படையினரால் மீறப்பட்ட மனித உரிமைகளுக்கு எதிராக ஜெனீவாவில் நiபெற்றுவரும் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டு பிரேரணைகளுக்கு உலக நாடுகள் பல அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கைக்கு எந்தவகையிலும் உதவியாகவும் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைவதற்கு ஒரு வகையில் ஆதரவு அளித்தும் வந்த அயல்நாடான இந்தியா தனது ஆதரவினை அமெரிக்காவிற்கு வழங்குவதாக உறுதியளித்திருப்பது இலங்கை அரசையையும் அதன் மக்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

கிழக்காசியாவில் பலம் பொருந்திய வல்லரசுக்கு தகுதிகளை எதிர்பார்த்திருக்கும் நாடு இந்தியா. இந்தியாவை அமெரக்கா தன் ஆட்காட்டி விரலால் அடிபணிய வைத்துள்ளது. இந்நிலமை இலங்கையைச் சுற்றியுள்ள ஏனைய நாடுகளுக்கு இலங்கைக்கு ஆதரவு அளிக்கும் விடயத்தில் சிக்கலைத் தோற்றுவிக்கும்.

அரபுலகம் ஒரு போதும் அமெரிக்காவை எதிர்த்து தன்காலை ஒரு சாண்கூட முன் எடுத்து வைக்காது. இந்நிலையில் அரபு உலகத்தை இலங்கை நம்புவது தன் தலையில் தானே மண் அள்ளிப் போடுவதற்கு சமமானதாக இருக்கும். அண்மைக்காலமாக அமெரிக்காவுடன் முறுகலை ஏற்படுத்தி வரும் பாகிஸ்தான் இது வரையில் உத்தியோக பூர்வமாக தனது இலங்கை தற்போது எதிர்நோக்கிவரும் இக்கட்டான நிலை குறித்த கருத்தை வெளியிடவில்லை. பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவுக் கரங்களை நீட்டினால் அது எந்த அளவு இலங்கையின் நெருக்கடிகளை தீர்க்கும் என்பது பொறுத்திருந்தே நோக்கவேண்டும்.

இதற்கிடையில சரத்பொன்சேகா கைது செய்யப்பட்டு சுமார் 3 வருடங்களாக அவரை சிறையில் அடைத்து வைத்திருப்பதும் உலக நாடுகளுக்கு ஆரம்பம் முதலே பல சந்தேகங்களை  ஏற்படுத்தி வருகின்றமை இங்கு கவனிக்கத்தக்கவை. இதவும் அரசாங்கத்தின் பலவீனங்களில் ஒன்றாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது. இலங்கைக்குள்ளும் அமெரிக்கர்கள் இருப்பதாக இலங்கையின் பிரதான அரசியல்வாதிகள் எதிர்க் கட்சியினரை குற்றம் சாட்டிவருகின்றனர். இலங்கை மீதான இந் நெருக்கடிக்கு எதிர்க்கட்சிகள் மேலைத்தேசத்திற்கு மறைமுகமான ஆதரவுகளை வழங்கி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது.

அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா, தௌஹீத் அமைப்புக்கள், மற்றும் ஏனைய இஸ்லாமிய அமைப்புக்கள் இலங்கை முஸ்லிம்களுக்கு விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட உயிர்ச் சேதங்களை அம்பலப்படுத்தி அண்மையில் தலைநகரிலும் இலங்கையின் ஏனைய பாகங்களிலும் மேலைத் தேசத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களைச் செய்து வருகின்றனர். எனினும் இலங்கைக்குள் செய்யப்படும் இவ்வாறான எந்தவொரு ஆர்ப்பாட்டங்களும் ஜெனீவா தீர்மானங்களை மாற்றப் போவதில்லை. இது இலங்கையின் ஆளும் கட்சிக்கு மறைமுகமான ஆதரவைத் திரட்டுவதாகவே அமைகின்றது.

 விலைவாசிகள் அதிகரிப்புக்கு எதிராக அண்மையில் பொதுமக்கள் மேற்கொண்ட ஆரப்பாட்டங்கள் அரசாங்கத்தால் முடக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த மக்கள் தாக்கப்பட்டனர். சிலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவற்றுக்கெல்லாம் அரசாங்கம் எந்த மாற்று நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாகவும் அரசாங்கத்தின் அதிருப்தியான ஆட்சிகள் காரணமாகவும் இலங்கையின் அதிகமான மக்கள் இலங்கைக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளாமல் தவிர்ந்து வருகின்றனர்.

உலக முஸ்லிம்களிடம் இருக்கும் வளங்கள், செல்வாக்குகள் என்பவற்றை வைத்தே இலங்கையில் முஸ்லிம்கள் மீது விடுதலைப் புலிகளால்  மேற்கொள்ளப்பட்டு வந்த உயிர்ப் படு கொலைகளை உலகுக்கு முன்வைக்க முடியும். தெட்டத் தெளிவான ஆதாரங்களும் சுவடுகளும் இருந்தும் இவற்றை உலகுக்கு முன்வைக்க ஓர் தனித்துவ முஸ்லிம் ஊடகம் இலங்கையில் இல்லாமல் இருந்தமையும் இல்லாதிருப்பதும் இலங்கையில் முஸ்லீம்கள் வாழ்கின்றனரா அல்லது அவ்வாறானதொரு இனம் இலங்கையில் இருக்கின்றதா என உலக மக்களால் இன்றும் சந்தேகத்துடன் நோக்கப்பட்டு வருகின்றமையும் இலங்கை முஸ்லிம்களின் மற்றுமொரு பலவீனமாக இருக்கின்றது.

புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் ஒற்றுமையும் பலமும் மற்றுமொரு காரணமாக இருக்கின்றது. எமது இலங்கை முஸ்லிம்கள் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் முஸ்லிம்கள் மீதான புலிகளின் படுகொலைகளை வெளிச்சம் போட்டு உலகுக்கு எடுத்து, முன்வைக்க முடியாமல் இருப்பதும் மற்றுமொரு முஸ்லிம் சமூகத்தின் பலவீனமாக இருப்பதும் இங்கு நோக்கத்தக்கது.

ஒரு தேர்தலைவிடவும் அதிகமான ஆதரவுகளை அரசாங்கம் நாடு ரீதியில் திரட்டிவருகின்ற இந்நிலையில் அதிகமான கல்விமான்களும் பெரும்புள்ளிகளும் மௌனித்திருப்பது புரியாத புதிராக இருக்கின்றமையும் சிந்திக்க வைக்கின்றது.

yourkattankudy/politics

Published by

Leave a comment