ஆசியக்கிண்ணமும் கள நிலவரமும்

பங்களாதேசின் திறமையான ஆட்டத்தின் மூலம் பலம் பொருந்திய இந்திய அணியை நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் இந்நிலையில் கள நிலவரம் எப்படி இருக்கின்றது என்பது அநேகமான விளையாட்டு இரசிகர்களுக்குத் தெரிந்திருக்கும்.

1. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறுமாயின் இலங்கைக்கு இறுதிப் போட்டி ஒரு எதிர்பார்க்கப்பட்டதாக இருக்கும்.

2. மேற்படி போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதுடன் அதிகமான புள்ளிகளைப் பெறுவதும் இந்தியாவுக்கான கட்டமைப்பாக இருக்கின்றது. இந்நிலையில் இரு அணிகளும் நாடு ரீதியான அரசியல் வேறுபாட்டினைக் கொண்டிருப்பதால் இப்போட்டி விட்டுக் கொடுப்புக்கு ஏதுவாக அமையாது. பாகிஸ்தானை விட இந்தியாவுக்கு அழுத்தங்கள் அதிகமாக இருப்பதை இந்தியச் செய்திகள் தெரிவித்திருக்கின்றன.

3. எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவுள்ள இலங்கை-பங்களாதேஷ் போட்டியில் பங்களாதேஷை இலங்கை போனஸ் புள்ளியுடன் வெற்றி பெற்றால் இலங்கை இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும்.

எல்லாமே ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் பின்னரே இறுதி முடிவு தெரியும்.

பங்களாதேஷ் அணியானது இதுவரைக்கும் 260 ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் விளையாடி இதுவரைக்கும் 71 வெற்றிகளைப் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment