அதிகரித்து வரும் விபத்துகள்:
முப்பது வருட குரூர யுத்தம் பல ஆயிரம் உயிர்களை பலியெடுத்தது. ஆனால் இலங்கையில் இடம்பெறும் வீதி விபத்துகளினால் அதனை விட கூடுதலானவர்கள் இறக்கின்றனர் என்றால் ஆச்சரியப்படுவீர்கள்.
இலங்கையில் சுமாராக தினமும் 150 விபத்துகள் வரை இடம்பெறு கின்றன. இதனால் நாளாந்தம் 5 முதல் 6 பேர் வரை இறக்கின்றனர். வருடாந்தம் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வருடாந்தம் இறப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
இது நாட்டுக்குப் பெரும் தலை யிடியாகி விட்டது. விபத்துக்களின் அதிகரிப்பிற்கு வாகன சாரதிகளும் கூடுதல் பொறுப்பு கூற வேண் டும். இவர்களின் தவறினாலும் அதி கமான விபத்துகள் இடம்பெறுவதை மறுக்க முடியாது.
இந்த நிலையில் வீதி விபத்துகளை குறைக்கவும் சாரதிகளின் திறனை மேம்படுத்தி சிறந்த சாரதிகளை உருவாக்க வும் என புதிய சட்ட மொன்றை போக்கு வரத்து அமைச்சு அறி முகப்படுத்தியுள்ளது.
தவறிழைக்கும் சாரதி களுக்கு தண்டனை வழங்கும் வகையில் தண்டனைப் புள்ளி வழங்கும் முறை இது. சில நாடுகளில் இத்த கைய முறை பின்பற் றப்படுகிறது. இலங் கையிலும் இதற்கு சில வருடங்களுக்கு முன் இந்த முறையை முன் னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் அதில் சாத்தியமாக வில்லை.
ஆனால் வீதி விபத் துகள் அதிகரித்து பல உயிர்கள் பலியாவதை யடுத்து மீண்டும் இந்த முறையை அமுல்படு த்த அரசாங்கம் தீர்மா னித்துள்ளது.
இதன்படி வீதி ஒழுங் குகளை மீறுவதற்கு ஏற்ப சாரதிகளுக்கு தண்டனைப் புள்ளிகள் வழங்கப்படும். 18 புள்ளிகளை எட்டியதும் குறித்த சாரதிக்கு மோட்டார் போக்குவரத்து ஆணையாளரின் எச்சரிக்கை கடிதம் வரும். 23 புள்ளிதான் ஒரு சாரதி 2 வருட காலத்தில் சாரதி ஒருவர் பெறக்கூடிய அதிகூடிய தண்டனைப் புள்ளியாகும்.
24 புள்ளியானதும், அவரது சாரதி அனுமதிப் பத்திரம் ஒரு வருட காலத்துக்கு ரத்தாகும். ஒரு வருடத்தின் பின்னர் எதுவித அறவீடும் இன்றி மீண்டும் அனுமதிப்பத்தி ரம் திருப்பி வழங்கப்படும். மீண் டும் தவறிழைத்து தண்டனைப் புள்ளிகள் சேர்ந்தால் சாரதி அனுமதிப் பத்திரம் முழுமையாக ரத்துச் செய்யப்படும்.
சாரதிகள் இழைக்கும் தவறுகள் படிவம் ஒன்றில் பதியப்படுவதோடு, மாதாந்தம் அந்த விபரம் மோட்டார் போக்குவரத்து ஆணையாளருக்கு அனுப்பப்படும். எதிர்காலத்தில் இந்த முறை கணனி மயப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விபத்து ஏற்படுத்தி விட்டு வாகன த்தை நிறுத்தாது ஓட்டிச் செல்லுதல், கையடக்கத் தொலைபேசியில் உரையாடியவாறு வாகனம் ஓட்டுதல், வீதி ஒழுங்குகளைப் பின்பற்றாது வாகனம் ஓட்டுதல், வீதி சமிக்ஞைகளை கடைப்பிடிக்காமை, அதிக ஹோர்ன் சத்தம் எழுப்புதல் என சகல விதமான தவறுகளுக்கும் வெவ்வேறு அளவான தண்டனைப் புள்ளிகள் வழங்கப்பட உள்ளது.
அதி கூடுதலாக 10 புள்ளியும் குறைந்தது 2 புள்ளியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சாரதிகளின் திறனை அதிகரிக்கும் நோக்கத் துடன் மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டத்தில் 4 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் இந்த சட்ட திருத்தங்கள் பாரா ளுமன்றத்தில் நிறைவேற் றப்பட்டன.
எதிர்காலத்தில் இந்த தண்டனைப் புள்ளி திட்டம் அமுலாவ தோடு, வீதி விபத்துகள் குறையலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. எத் தனை சட்டங்கள் நிறை வேற்றினாலும் அவை முறையாக தலையீடுகள் இன்றி அமுல்படுத்தப் படுவதிலேயே அதன் வெற்றி தங்கியுள்ளது.
-Thinakaran
![f1-2[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/03/f1-21.jpg?w=300&h=234)
Leave a comment