-MJ
சர்வசே ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் சதங்களில் சதத்தைத் தொட்ட லிட்டில் மாஸ்டர் டெண்டுல்கார் அவர்களின் மகிழ்ச்சியில் ‘உங்கள் காத்தான்குடி/Sports’ பங்கெடுக்கின்றது. வாழ்த்துக்கள்!
‘லிட்டில் மாஸ்டர்’ என உலகில் அழைக்கப்படும் இந்திய அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரரும் இந்தியாவின் புகழுக்குரியவருமான சச்சின் ரமேஸ் டென்டுல்கார் (Sachin Ramesh Tendulkar) இன்று பங்களாதேசில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசியக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஸ் இற்கு எதிரான மற்றுமொரு சதத்தினைப் பெற்றதன் மூலம் 100 ஓட்டங்களில் 100வது இலக்கைத் தொட்டுள்ளார்.
கடந்தவருடம் நடைபெற்ற 2011 உலகக் கிண்ணப் போட்டியின் பின்னர் தனது 100வது சதத்தினை ஒவ்வொரு போட்டியிலும் எதிர்பார்த்திருந்த டெண்டுல்காரும் அவரது இரசிகர்களும் பல ஏமாற்றங்களைப் பெற்று வந்தனர். மேலும் டென்டுல்கார் ஓய்வு பெறுவது நல்லதே எனவும் அவர் கடந்த உலகக் கிண்ணத்துடன் ஓய்வு பெற்றிருக்கவேண்டும் என்ற பலவிதமான ஊடகத் தாக்கங்களுக்குள் சிக்கி, இன்று அவர் மேற்படி ஊடகங்களுக்கும் விளையாட்டுப் பிரமுகர்களுக்கும் தனது உலகசாதனை சதத்தினால் பதிலடி கொடுத்திருக்கின்றார். இப்போட்டி இன்று நடைபெற்று முடிவதற்கிடையில் யார் யாரெல்லாம் அவருக்கு வசைபாடினார்களோ அவர்களெல்லாம் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்க மறக்கமாட்டார்கள்.
ஏப்ரல் மாதம் 24ம் திகதி 1973ம் வருடம் இந்தியாவில் மகாராஸ்த்திரா மாநிலத்தில் மும்பை நகரில் பிறந்த டெண்டுல்கார் தனது கன்னி டெஸ்ட் போட்டியை 1989ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராகவும், கன்னி ஒருநாள் போட்டியை டிசம்பர் 1989ம் ஆண்டு பாகிஸ்தானுக்க எதிராகவும் ஆடினார். தனது 16வது வயதில் சர்வதேச கிரிக்கட்டில் நுழைந்த இவர் இந்த அளவுக்கு உலக சாதனை படைப்பார் என இந்தியா அப்போது கனவு கண்டிருக்கவில்லை.
எனினும் பாடசாலை நாட்களில் இவரது விளையாட்டுத் திறமை இந்தியாவின் புகழை அன்றைய நாட்களில் தொட்டுச் சென்றதை இந்திய மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். சச்சின் டெல்டுல்காரின் பாடசாலை அணியின் பயிற்றுவிப்பாளர் டெண்டுல்காரை அப்போது எதிர்வு கூறியிருந்தார். வினோட் கம்ப்ளி-டெண்டுல்கார் ஆகியோர் பாடசாலை அணிக்கு ஒரு போட்டியில் 600 ஓட்டங்களைக் கடந்த இணைப்பாட்டத்தைப் பெற்றதே இருவரும் சர்வதேச கிரிக்கட்டுக்குள் நுழைவதற்கு காரணமாக அமைந்தாலும் பின்னர் சீரற்ற விளையாட்hல் கம்ப்ளி அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
பாடசாலைப் போட்டி ஒன்றில் சச்சின் திறமையாக ஆடிக் கொண்டிருந்தார். இது ஒரு டெஸ்போட்டியாக இருந்தது. சச்சின் 99 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். எனினும் தங்களது துடுப்பாட்டத்தை இத்துடன் நிறுத்தினால் எதிர் அணியின் விக்கட்டுக்களை தற்பொழுது சரித்துவிட முடியும் என்று தங்களது அணியின் துடுப்பாட்டத்தை நிறைவு செய்யும்படி பயிற்சியாளர் கூறினார். ‘இல்ல சேர். இன்னும் ஒரு ஓட்டம் பெற்றால் சச்சின் சதம் பெற்றுவிடுவான் எனவே சச்சினின் சதத்துடன் நாம் நிறைவு செய்வோம்’ – ஏனைய வீரர்கள் கவலையுடன் கூறினர். ‘இந்நேரம் நீங்கள் உங்களது புகழை எதிர்பார்ப்பதை விட பயிற்றுவிப்பாளருக்குக் கட்டுப்படுவதையே தான் விரும்புவதாகவும் அதனதல் போட்டியை நிறைவு செய்யும்படியும்’ பயிற்றுவிப்பாளர் கூறியதும் 99 ஓட்டங்களுடன் சச்சின் மைதானத்திலிருந்து வெள்யேறினார். இன்று சர்வதே ஒரு நாள் போட்டிகளில் 100 சதங்களைக் கடந்து எட்ட முடியாத மைல்கல் ஒன்றை கிரிக்கட் பாதையில் வைத்துச் சென்றுள்ளார்.
சச்சின் டெண்டுல்கார் ‘பத்மா விபுசான்’, ‘ராஜிவ்காந்தி ஹெல்ரத்னா’ போன்ற உயர் இந்திய விருதுகளையும், மைசூர் யூனிவர்சிட்டியின் ‘டொக்டர்’ விருதையும் இந்திய விமானப்படையின் ‘அணித்தலைவன்’ விருதையும் பெற்றுள்ளமையும் அவருக்கான கௌரவங்களாக அமைகின்றது.
yourkattankudy/sports
Leave a comment