ஆசியக் கிண்ணப் போட்டியில் இலங்கையின் வெற்றிக்கனவு நிறைவடைகிறது என்ற தருணத்தில் அதன் இரசிகர்கள் சிந்தும் கண்ணீருடன் இன்றைய உறக்கத்திற்குச் சென்றிருக்கும் இந்நேரம் ஓர் மௌன இரவாக இன்றைய இரவுப் பொழுது கடந்து செல்கின்றது.
துடுப்பாட்டத்திற்கு ஏதுவான ஆடுகளமாக இருந்தும் பாகிஸ்தானின் பந்து வீச்சை எதிர் கொள்ள முடியாமல் சுருண்டு விழுந்த இலங்கை அணியிடம் ஓர் தடுமாற்றம் இருந்ததை காணமுடிந்தது. இலங்கை சகல விக்கடடுக்களையும் இழந்த போது 188 ஓட்டங்கள் பெறப்பட்டிருந்தன. சங்கக்காரவும் தரங்கவும் எவ்வாறு ஓர் இணைப்பாட்டத்தின் மூலம் இலங்கை அணியை இவ் ஓட்ட இலக்கு வரை கரை சேர்த்தனரோ அதே போல் ஒரு இணைப்பாட்டம் சரிந்து கிடந்த பாகிஸ்தான் அணிக்கு வழு சேர்த்தது. மிஸ்பாவும் அக்மலும் நிலைத்திருந்த 153 ஓட்ட இணைப்பாட்டம் இலங்கையின் தோல்வியை உறுதிப்படுத்தி இருந்தது. இலங்கை வீரர்களிடையே வெற்றி பெரும் மனப்பான்மையும் உற்சாகமும் தளர்ந்திருந்ததையும் காணமுடிந்தது. முடிவு பாகிஸ்தான் அணி தான் விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி இருக்கின்றது.
வெள்ளிக்கிழமை (16-03-2012) நடைபெறும் இந்தியா-பங்களாதேஷ் போட்டியில் பலம் பொருந்திய இந்திய அணியை பங்களாதேஷ் தனது சொந்த நாட்டில் வீழ்த்துமா அல்லது பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடிக்குமா என்ற எதிர்பார்ப்புக்கும் அப்பால் ஓர் அவாவுடன் காத்திருக்கும் இலங்கை இரசிகர்களுக்கு கூறுவதற்கு ஒன்றும் இல்லை! நான்கு முறை ஆசியக்கிண்ணத்தைக் கைப்பற்றி பல முன்னணி வெற்றிகளை அண்மையில் பெற்று வந்த இலங்கை அணியின் CB கிண்ண தோல்வியை தாக்கிங் கொண்ட இரசிகர்களால் இந்த ஆசியக் கிண்ணச் சுற்றில் இருந்து இலங்கை வெளியேறுவது இலங்கை இரசிகர்களுக்கு ஓர் ஏமாற்றமாகவே அமையும்.
Leave a comment