இன்று நடைபெறும் ஆசியக் கிண்ண மூன்றாவது போட்டியில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் பலப் பரீட்சையில் ஈடுபட இருக்கின்றன. இலங்கை இப்போட்டியில் வெற்றி ஈட்டுவது இலங்கை ஆசியக்கிண்ணத்துக்கான இத்தொடரில் இலங்கை அணியின் இருப்பை உறுதி செய்வதாக அமையும். தொடர் இருப்பா அல்லது தொடரிலிருந்து வெளியேறுவதா என்ற முடிவு தெரிந்து விடும்.
இதே போல் பாகிஸ்தான் இப்போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகக் கூடிய சந்தர்ப்பம் அதிகமாக இருக்கும்.
சுமார் 600 ஓட்டங்களை இரு இணிங்ஸ் இலும் பெற்றுக் கொள்ளக்கூடிய ஆடுகளமாகவே இம் மைதானம் அமைந்திருக்கின்றது. எனவே ‘நானயச் சுழற்சி’ வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதை விட ஓர் அணியின் சிறந்த துடுப்பாட்டம் அல்லது துடுப்பாட்ட வரிசை போட்டியை வெற்றிக்குக் கொண்டு செல்லும் என சிரேஷ்ட விளையாட்டு அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
![images[9]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/03/images9.jpg?w=300&h=118)
Leave a comment