சீனாவில் உற்பத்தியாகும் ஒலிம்பிக் பொம்மைகள்

லண்டனில் எதிர்வரும் கோடைக்காலத்தில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பல வகையான அழகிய ஒலிம்பிக் பொம்மைகள் தற்பொழுது சீனாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

சீனாவின் பிரபல நிறுவனங்களில் ஒன்றான Yancheng Rainbow Arts and Crafts Co Ltd எனும் நிருவனம் இவற்றை உற்பத்தி செய்து வருகின்றது.

பிரித்தானியாவிலும் பார்க்கிலும் அதி குறைந்த செலவில் இந்த பொம்மைகளை சீனாவில் உற்பத்தி செய்ய  முடியும் எனக் கருதி பிரித்தானியாவுக்கான ஒலிம்பிக் நிறுவனத்தின் நிதித்துறையினர் இவற்றினை சீனாவில் உற்பத்தி செய்து வருகின்றனர. சுமார் ஆறு ஸ்டேர்லின் பவுண்ட் தொடக்கம் 15 ஸ்டேர்லின் பவுண்ட் வரைக்கும் ஒலிம்பிக் காலத்தில் விற்கப்படும் இவ்வகையான பொம்மைகள் ஒரு பவுண்ட் இற்கும் குறைவான உற்பத்திப் பெருமதியையே கொண்டிருக்கின்றன.

சீனா இன்று உலகின் வர்த்தகத்தில் தனிச் சிறப்பைப் பெற்று வருகின்றது. உலகில் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் சீனாவுடன் வர்த்தக உடன்படிக்கைகளைச் செய்துள்ளதுடன் ஒரு நேரடி அல்லது மறைமுகப் பங்காளராகவும் வர்த்தக உலகில் சீனா இருப்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment