ஆசிய கண்டத்தில் 1980 களில் விளையாடி வந்த கிரிக்கட் அணிகளை பிரிதிநிதித்துவப்படுத்தும் முகமாக ஆசிய கிரிக்கட் சம்மேளனத்தினால் (Asian Cricket Council) இச்சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
முதலாவது ஆசியக் கிண்ணப் போட்டி 1984ம் வருடம் அப்போது புகழ்பெற்றிருந்த சார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டி இலங்கை மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கிடையே நடைபெற்றது. இப்போட்டியில் நடப்பு உலகச் சம்பியனாக இருந்த இந்தியா அணி கிண்ணத்தைக் கைப்பற்றி இருந்தது.
அவுஸ்திரேலியா- அசிய கிண்ணப் போட்டிகள் 1986களில் ஆசிய நாடுகளான இலங்கை, இந்தியா, இலங்கை இதே போல் அவுஸ்திரேலியா கண்டத்தைப் பிரகடனப்படுத்தும் அணிகளான அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்கு பற்றிய ‘மெகா’ கிரிக்கட் தொடர்கள் தகவல் தொழிநுட்பம் முன்னேறாத அக்காலத்தில் விளையாடப்பட்டு கிரிக்கட் இரசிகர்களின் மனங்களில் குடியிருந்த தொடர்கள் அவை. சார்ஜாவின் புகழும் கிரிக்கட்டும் ஓங்கி வளர்ந்த கால கட்டம். பின்னர் இவ்விணைப்புக்கண்ட போட்டிகள் நிறுத்தப்பட்டன. இத்தொடரில்தான் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய ஓர் போட்டியில் இறுதிப்பந்தில் ஜாவிட் மியண்டாட் சிக்ஸர் அடித்து உலகம் போற்றப்பட்டதும் ஞாபகத்தில் உள்ளது.
இதன் பின்னர் 1986ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஜோன் பிளேயர் ஆசியக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தமை இலங்கையின் கிரிக்கட் இரசிகர்களுக்கு மட்டில்லா மகிழ்ச்சியை அளித்ததுடன் அக்காலப்பகுதியில் படு தோல்விகளைச் சந்தித்து வந்த இலங்கை அணிக்கு இவ் வெற்றியானது ஓர் திருப்புமுணையாக அமைந்தது.
அப்போது இலங்கையில் நிலவி வந்த இனப்பிரச்சினையின் தீர்வில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அரசியல் ரீதியான விரிசல்கள் தோன்றி இருந்ததால் இந்திய கிரிக்கட் அணி 1986 ல் இலங்கையில் நடைபெற்ற இவ் ஆசியக் கிண்ணப் போட்டியை பகிஸ்கரித்து கலந்து கொண்டிருக்கவில்லை. இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் ஆகிய மூன்று அணிகளே பங்கு பற்றி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டியில் இலங்கை பாகிஸ்தான் அணியை தோற்கடித்திருந்தது. மகிழ்ச்சி வெள்ளம் நாடு முழுவதும் பரவியது. பட்டாசுகள் வானைப் பிளந்தன. கொடிகள் கம்பங்களில் ஏற்றப்பட்டன. இலங்கை அணியின் வளர்ச்சிக்கு அதிக பங்களிப்புச் செய்து வந்த அப்போதைய இலங்கையின் ஜனாதிபதி திரு ஜே. ஆர். ஜயவர்த்ததனா மறு நாள் பாடசாலைகளையும் ஏனைய அரச நிறுவனங்களையும் மூடி வெற்றியைக் கொண்டாடும்படி மக்களைக் கேட்டுக் கொண்டார். இதன் பின்னரே பட்டி தொட்டி எங்கும் கிரிக்கட் பரவியது, வளர்ந்தது.
தற்பொழுது பங்களாதேசில் நடைபெற்று வருவது 11 வது ஆசியக் கிண்ணப் போட்டிகளாகும். இருந்தும் எத்தனை வருடங்களுக்கு ஒர் முறை இப்போட்டிகள் நடைபெறுகிறது என்பதை திட்டவட்டமாகக் குறிப்பிட முடியாமல் இருப்பது இச்சம்மேளனத்தின் குறைபாடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
இந்நிலையில்,
இந்தியா முறையே 1984, 1988, 1990-91, 1995, 2010 ஐந்து தடவைகள் வெற்றி பெற்றிருப்பதும்,
இலங்கை 1986, 1997, 2004, 2008 நான்கு தடவைகள் வெற்றி பெற்றிருப்பதும்,
பாகிஸ்தான் 2000 ம் ஆண்டில் மாத்திரம் வெற்றி பெற்றிருப்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கவை.
அடுத்த ஆசியக் கிண்ணப் போட்டி 2014ம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
![93267.2[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/03/93267-21.jpg?w=300&h=199)
![Sri-Lanka-Cricket-Team[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/03/sri-lanka-cricket-team1.jpg?w=300&h=200)
Leave a comment