கணினிகளை வழங்கிவிடுவதால் மாத்திரம் தகவல் தொழில் நுட்பத்தை கிராமங்களுக்குக் கொண்டு சென்றுவிட முடியாது.

ஆசிரியர்கள் செயற்பாட்டுடன் பங்களிப்பு செய்தால் மாத்திரமே அது சாத்தியமாகும்.

(கல்வி அமைச்சு)

தகவல் தொழில் நுட்பத்தை கிராமங்களுக்குக் கொண்டு செல்வதானால் கணினிகளை வழங்குவது மாத்திரம் போதாது. ஆசிரியர்களும் தேவையான அறிவை மாணவர்களுக்கு வழங்குவதுடன் அது தொடர்பாக செயற்பாட்டுடன் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்று கல்வி அமைச்சர் மாண்பு மிகு பந்துல குணவர்தனா குறிப்பிட்டார்.

“ஆக்கம்சார் கல்வி மென்பொருள் தேசிய போட்டி – 2011” வெற்றியாளர்களுக்கு கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம் பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் கல்வி அமைச்சர் இவ்வாறு கூறினார். கல்வி அமைச்சினால் செயற்படுத்தப்படும் “அறிவுச் சமூகத்துக்கான கல்விச் செயற்றிட்டம்” மற்றும் மைக்றோ சொவ்ப்ட் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டி மூன்று பிரிவுகளில் 9 பகுதிகளின் கீழ் மாகாணம் மற்றும் தேசிய மட்டத்தில் இடம் பெற்றது. ஆசிரியர்கள் மற்றும்  பாடசாலைப் பிள்ளைகள் போட்டிகளில் பங்கு பற்றியிருந்தார்கள்.

“தேசிய எதிர்கால கிராம அமைப்பு நவீன தகவல் தொழில் நுட்பத் திறன் மற்றும் வாண்மையை வழங்கப்பட்டு தேசிய மற்றும்  பன்னாட்டு மட்டத்தில் ஏற்றுக் கொள்ளத்தக்க பெறுமதி வாய்ந்த  மனித வளத்தைக் கட்டியெழுப்புவது” என்ற குறிக்கோளில் 2006 ம் ஆண்டில் தீவு முழுதும்  ஆரம்பமாகிய இந்த போட்டியில் 4800 மென்பொருள்  வழங்ப்பட்டன. இம்முறை போட்டிக்காக 90000 மென்பொருட்ள்  வழங்கப்படுகின்றன.

மாகாண மட்டத்தில் வெற்றி பெற்றோரைத் தேசிய மட்டத்தில் தோன்றச்  செய்து மதிப்பீட்டைப் பெற்று பன்னாட்டு போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்யும்  பொருட்டு ஆசிரியர்களை அடையாளம் காணல் இம்முறை போட்டிகளில்  இடம் பெற்றது. அத்துடன் பன்னாட்டு மட்ட மதிப்பீட்டுக்கு அமைய இம்முறை வெற்றியாளர்களைத் தெரிவு              செய்தது மதிப்பீட்டு முறையில் சிறப்பு அம்சமாகும்.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மகிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் தகவல் தொழில் நுட்பத்தைக் கிராமங்களுக்குப் பரவச் செய்வதற்காக  2012-2016 காலப்பகுதியில் கல்வி  அமைச்சு பெறுமதிமிக்க வேலைத் திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றது. அரசு தேவையான  வளத்தை வழங்குவதுடன் ஆசிரியர்கள் பொருத்தமான பிள்ளைகளை  முன்னிறுத்தினால், அந்த நோக்கத்தை நிறைவேற்றி தகவல் தொழில நுட்ப புலத்தின் ஊடாக இலங்கை சிறந்த இடத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அமைச்சர் இங்கு விளக்கம் அளித்தார். அதுபோல, மார்ச் மாத இறுதியில் 1000 இடைநிலைப் பாடசாலைகளுக்காக  புதிதாக ஆசிரியர்கள் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கல்வி அமைச்சின் செயலாளர் திரு எச்.எம். குணசேகர மற்றும் மைக்றோ சொவ்ப்ட் நிறுவனத்தின் இலங்கை முகாமையாளர் திரு சிறியான் டி சில்வா ஆகியோருட்பட பலர் கலந்து கொண்டனர்.

Published by

Leave a comment