சர்வதேச மகளிர் தினம்

தாய்மையின் மகத்துவத்தை உணர்த்தும் சர்வதேச மகளிர் தினம் இன்று நாடெங்கிலும் அமைதியான முறையில் கொண்டாடப்படுகின்றது. ஒரு நாடு, ஓர் இனம், ஒரு கிராமம் அல்லது ஒரு குடும்பம் நல் வழியில் மேம்பாடு அடைய வேண்டுமாயின் ஒரு பெண்ணின் பங்களிப்பு இன்றியமையாததாக இருக்கிறது.

இலங்கையில் சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவதற்கான பொறு ப்பை ஏற்றுக் கொண்டுள்ள சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமை ச்சு, பெண் பிள்ளைகளை பாதுகாப்போம் என்ற தேசிய தொனிப்பொருளில் இன்றைய சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தை சிறப்பிக்க உள்ளது. பிள்ளைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது நாட்டின் எதிர்கால பாதுகாப்பிற்கு ஒரு சிறந்த செயற்பாடாக அமைகிறது. துரித கதியில் சமூகம் மாறுபட்டுக் கொண்டிருப்பினும் அதற்கு ஒருங்கிணைந்தவாறாக பெண்கள் தொடர்பில் சமூகத்தில் நிலவுகின்ற கருத்துக்களும் நம்பிக்கைகளும் மாறுபடுகின்றது என்பது இன்று விவாதத்திற்குரிய விடயமாகும்.

பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகள், அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள், பாலியல் வல்லுறவுகள், உள ரீதியிலான தாக்கங்கள், கொலை கள் போன்றவற்றை அதிகமாக தாய்குலமே எதிர்நோக்குகின்றது. அதிலும் இந்த கொடூரத்திற்கு மிகவும் இலகுவாக ஆளாகுவது பெண் பிள்ளைக ளாகும்.

யுவதியாகவும், மனைவியாகவும், தாயாகவும் சமூகத்தில் பாரிய பொறுப்புகளை சுமக்க வேண்டியுள்ள பெண்களுக்கு சிறுவயதிலேயே இவ்வாறான அழுத் தங்களுக்கு முகம் கொடுப்பது கவலைக்குரிய விடயமாகும். பெண் பிள் ளைகளை பாதுகாக்கும் தேசிய கடமையாகக் கொண்டுள்ள நடவடிக்கை களை தமது அமைச்சு மேற்கொள்ள இருக்கிறதென்று சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிராக நாளாந்தம் நாடு பூராவும் கேள்விப்படுகின்ற வல்லுறவு களை இல்லாதொழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்பமும் இன்றைய தினம் ஒருங்கிணைவாக மேற்கொள்ளப்படும். பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் பொருத்தமான சமூக கட்டமைப்பையும் நோக்கத்தையும் அடையும் போது, உரிமைகளையும், பொறுப்புகளையும் வென்றெடுத்து, பொரு ளாதார ரீதியில் வலுப்படுத்தி மென்மேலும் உறுதியுடனும், ஒழுங்கமைப்புட னும் நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மகளிர் தினம் தொடர்பாக விடுத்து ள்ள அறிக்கையில் இலங்கை சமூகத்தில் முக்கிய இடம் வகிக்கின்ற பெண் கள் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திக்காக பாரிய பங்காற்றி வரு கின்றனர். இன்று அவர்கள் ஆடைத் தொழிலின் ஊடாக பாரிய பங்களி ப்பை வழங்கி வருகின்றனர். அது போன்று அவர்கள் சட்டத்துறையிலும் மனிதவளத் துறையிலும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றனர். இலக் கியம், மருத்துவம், ஆசிரியர், தாதிச் சேவை உள்ளிட்ட அனைத்து துறை யிலும் சிறந்து விளங்கி நாட்டின் மேம்பாட்டுக்காகவும் தேசியப் பொருளா தாரத்தை வளர்ப்பதற்காகவும் தங்கள் பூரண பங்களிப்பை பெண்கள் வழ ங்கி வருகின்றார்கள் என்று தெரிவித்துள்ளார். நம்நாட்டு பெண்களின் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தங்கள் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தும் தியாக உணர்வுடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் சில ஐரோப்பிய நாடுகளுக்கும் பணிப் பெண்களாக சென்று கடுமையாக பாடு பட்டு தங்கள் உதிரத்தையே வியர்வையாக வெளியிட்டு எங்கள் நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு தேவையான வெளிநாட்டு நாணயமாற்றை சம் பாதித்து கொடுக்கிறார்கள்.

தேசப்பற்றுடன் இந்தப் பெண்கள் மேற்கொள்ளும் தியாகத்தினால் அவர்களின் குடும்பம் எதிர்பார்த்த அளவு நன்மை அடைவதில்லை. தனது கடுமையான உழைப்பின் மூலம் அந்தப் பெண் அனுப்பி வைக்கும் பணத்தை கணவன் மார் குடித்தும், கூத்தாடியும் செலவழித்து பிள்ளைகளை அந்தப் பெண் எதி ர்பார்த்த அளவுக்கு பராமரிப்பதும் இல்லை. இதனால் அந்தப் பெண்ணின் பிள்ளைகளின் கல்வியும் சீர்குலைந்து போகின்றது. இவ்விதம் தியாகங் களை செய்து இளமைக் காலத்தை வெளிநாடுகளில் பணிப்பெண்களாக பணி புரிந்து வயோதிபத்தை எட்டும் போது நாடுதிரும்பும் இந்தப் பெண்களுக்கு இலங்கையில் எவ்வித சேமிப்பும் இருப்பதில்லை. குடியிருப்பதற்கு வீடு களும் இல்லாத நிலையில், பிள்ளைகளும் சீர்குலைந்து சமூகத்திற்கு ஒரு பெரும் பாரமாகவே மாறியிருப்பார்கள்.

இவ்விதம் நாட்டின் தேசிய வருமானத்தை கட்டியெழுப்புவதற்காக பாடுபடும் தாய் குலம் இறுதியில் வாழ்க்கையில் எவ்வித வசதியும் இன்றி செல்லாக்காசாகி மரணிக்கின்ற சம்பவங்களும் இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கி றது. ஆகவே தான் மஹிந்த சிந்தனை எண்ணக்கருவில் எமது நாட்டின் பொருளாதார செயற்பாட்டில் அதிகமான பங்களிப்பை செய்பவர்கள் பெண் களாகும். பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை, வெளிநாட்டுத் தொழில் மற்றும் ஆடைத்தயாரிப்புத் துறை ஆகியவற்றில் பெண்களின் பங்களிப்பு மிக வேகமாக அதிகரித்துள்ளது. எனவே, எமது நாட்டின் பெண்களுக்கு சமமான இடத்தை சமூகத்திலும், அரசியலிலும் பெற்றுக் கொடுப்பது எனது அரசாங்கத்தின் நம்பிக்கை என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கு சுய தொழில், சமவருமான வழிகளை மேம்படுத்துவதுடன் மக ளிர் தொழில் முயற்சி நிதி ஒன்றையும் ஆரம்பிப்பேன் என்று தெரிவித்து ள்ள ஜனாதிபதி, ஒரே தொழிலை புரியும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான ஊதியம் பெற்றுக் கொடுப்பதையும் கட்டாயப்படுத்துவேன் என்றும் உறுதியளித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் நிகழ்ந்த மோதல்கள் மற்றும் வன்முறைகள் இயற்கை அனர்த் தங்களினால் பெண்களின் தலைமையிலான குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது. எனவே, அந்தக் குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை என்றும் ஜானாதி பதி தெரிவித்துள்ளார். இந்தியா போன்ற நாடுகளில் 33 சதவீதமான பெண் களுக்கு அரசியலில் பங்கு கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கின்ற போதி லும் இலங்கை பெண்களுக்கு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக் கின்றது. அப்படியிருந்தும் இலங்கையே முதலாவது பெண் பிரதம மந்தி ரியை உருவாக்கியது. அது போன்று ஜனாதிபதி பதவியிலும் பெண் ஒரு வரும் அமர்ந்திருந்தார்.

இத்தகைய பின்னணியில் அடுத்த சில வருடங்களில் பெண்ணுரிமை மேம் படுத்தப்படுவதுடன் அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவமும் அதிகரிப்பத ற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்று நாம் நம்பிக்கை கொள்ளலாம்.

-தினகரன்.

Published by

Leave a comment