(அஷ்செய்ஹ். C.M.M.அமானி)
காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமா காத்தான்குடியில் உள்ள ஜூம்ஆப் பள்ளிவாயல்களுக்கும் காத்தான்குடியைச் சூழவுள்ள ஜூம்ஆப் பள்ளிவாயல்களுக்கும் எதிர்வரும் 09-03-2012 வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்படவேண்டிய ஜூம்ஆ தலைப்பு சம்பந்தமாக பின்வருமாரு அறிவிக்கப்பட்டுள்ளது.
மௌலவி M.I.M.. ஜவாஹிர் (பலாஹி) BA.
பெரிய மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் காத்தான்குடி-01,
மௌலவி H.M.M. வலீத் (பலாஹி)
பத்ரிய்யா ஜூம்ஆ பள்ளிவாயல், புதிய காத்தான்குடி -01
மௌலவி A.G.M. அமீன் பலாஹி
ஜாமிஉஸ் ஸலாம் ஜூம்ஆப்பள்ளிவாயல், மட்டக்களப்பு
மௌலவி அல்ஹாபிழ் H.M.ஸாஜஹான் பலாஹி BA.
மஸ்ஜிதுல் ஹிழ்ர் ஜூம்ஆ பள்ளிவாயல், மஞ்சந்தொடுவாய்
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ
09.03.2012ம் திகதிய ஜூம்ஆப் பிரசங்கம் தொடர்பாக…
கடந்த 29.02.2012ம் திகதி நகர முதல்வருடனான கலந்துரையாடல் தீர்மானத்திற்கமைவாக, நமது பிரதேசத்தினதும் காலத்தின் தேவையையும் கருத்திற்கொண்டு ‘இஸ்லாம் கூறும் சுத்தமும் திண்மக்கழிவகற்றல் தொடர்பான பிரச்சினைகளும்’ எனும் தொனிப்பொருளில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 09.03.2012ம் இடம்பெறவுள்ள ஜூம்ஆப் பிரசங்கத்தினை மேற்படி தலைப்பிலேயே நிகழ்த்துமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.
இத்துடன் மேற்படி விடயம் தொடர்பாக நகர முதல்வர் அனுப்பிய குறிப்புக்கள் தங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது.
எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவரது தூய செயற்பாடுகளையும் அங்கீகரிப்பானாக.
جزاكم الله خيرا
இவ்வண்ணம்,
தலைவர்: அல்ஹாஜ் மௌலவி S.M. அலியார் பலாஹி.
செயலாளர்: அஷ்செய்ஹ். M.H.ஜிப்ரி மதனி BA.
Leave a comment