(ஜீனைட்.எம்.பஹ்த், முகம்மட்.சுக்ரி)
காத்தான்குடி 167D கிராம சேவையாளர் பிரிவில் உள்ள அல்-அமீன் வீதியில் குப்பைகள் நிரைந்து கானப்படுகிறது. இதனை நகரசபை கவனத்தில் கொள்ளாமல் இருப்பதாக இப்பகுதியில் வசிக்கும் மக்கள் விசனம் தெறிவிக்கின்றனர். நகரசபையின் கவனக்குறைவால் தேங்கிநிற்கும் குப்பைகளால் டெங்கு நோய் பரவும் அபாயம் கானப்படுவதாக சுகாதார நிலையம் தெறிவித்துள்ளது. அன்மையில் இப் பகுதியில் உள்ள அல்-அமீன் வித்தியாலயத்தில் டெங்கு நுளம்புகள் கன்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்பகுதியில் உள்ள ‘பாவாலேன்’ எனும் வீதியை இனைக்கும் பாலத்தில் தேங்கிநிற்கும் நீரில் குப்பைகள் நிறைந்து அசுத்தமான நீராக கானப்படுகிறது. இப் பாதை காத்தான்குடி தேசிய பாடசாலை மற்றும் அல் அமீன் வித்தியாலயம் ஆகியவற்றிற்கு செல்லும் மாணவர்கள் பயன்படுத்தும் பாதைகளாகும். இவ் குப்பை அசுத்தத்தால் மாணவர்கள் உடல், உள ரீதியான பிரட்சனைக்கு முகம் கொடுப்பதாகவும், கற்கும் மன நிலையை இழப்பதாகவும் மாணவர்கள் தெறிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பல முறை நகரசபைக்கு தெறிவித்த போதிலும் இதனை நகரசபை கவனத்திற்கொள்ளாமல் இருப்பதாக அப் பகுதி மக்கள் தெறிவிக்கின்றனர்.
நகரசபை முன்னால் தவிசாளர்.மற்றும் நகரசபை ஊழியர்.ஆகியோர் இப்பகுதியில் வசிப்பது குறிப்பிடத்தக்கது. தற்காலத்தில் வீதிகளில் குப்பைபோட்டால் தன்டம் அறவிடும் நகரசபை பொதுமக்களின் வீடுகளில் சேகரித்துவைக்கப்பட்ட குப்பைகளை அகற்றுவதில் தாமதம் செலுத்துவது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும் என கருத்து தெறிவிக்கப்படுகிறது.
எனவே,
காத்தான்குடி நகரசபை தவிசாளர்..S.H.M. அஸ்பர் அவர்களே!
பிரதேச செயலாளர் அவர்களே!
சுகாதார பரிசோதகர் அவர்களே! …. இது உங்களின் கவனத்திற்கு…



Leave a comment