உலகை ஈர்க்கும் யூரோ கிண்ணம்

உலக உதைப்பந்தாட்ட இரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்திதான் யூரோ கிண்ணம் (Euro Cup) ஆகும். உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகளுக்கு அடுத்ததாக உலக உதைப்பந்தாட்ட இரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த யூரோ கிண்ணப் போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 8ம் திகதி ஆரம்பமாகிறது.

UEFA (Union of Europian Football Association) எனும் அமைப்பினால் உலகக் கிண்ணங்கள் போன்று நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடாத்தப்படும் இப்போட்டிகளை இம்முறை (2012) போலாந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இணைந்து நடாத்துகின்றன.

இப்போட்டிகள் எப்படி இரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கின்றதோ அதைவிட அதிமடங்கை இப்போட்டிக்குரிய இலட்சினை (Logo) இடம்பிடித்திருப்பதாக உலகக் கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்திருப்பதும் மற்றுமொரு விடயமானதா இருக்கின்றது.

இறுதியாக 2008 இல் நடைபெற்ற யூரோ கிண்ணப் போட்டியில் ஸ்பெய்ன் அணி வெற்றி பெற்று யூரோப்பிய சம்பியன் வரலாற்றில் இரண்டாவது தடவையாய் தடம்பதித்தது. பின்னர் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியிலும் இவ்வணி உலகச் சம்பியனாகியமையும் குறிப்பிடத்தக்கது. கடந்த இரு முறை நடைபெற்ற யூரோ கிண்ணப் போட்டிகளை இலங்கை ரூபவாஹினி நேரடி ஒளிபரப்புச் செய்தமையும் இங்கு ஞாபகப்படுத்தப்பட வேண்டியதே.

யூரோ கிண்ணம் சம்பந்தமான மேலதிக தகவல்களை எமது விளையாட்டு பக்கத்தில் பார்வையிடலாம்.

Published by

Leave a comment