‘ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் மேற்கொண்டால் அது அமெரிக்காவுக்கான முடிவு காலம்’ என துருக்கியின் சிரேஷ்ட அரசியல்வாதியான ‘நாமிக் கமால் செய்பக்’ அமெரிக்காவுக்கும் உலக செய்தி நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் 1980 தொடக்கம் 1989 வரை ஈராக்குடனான போரில் அதிக அனுபவங்களைப் பெற்றிருப்பினும் தற்போதைய உலக பாதுகாப்பு சவால்களைத் தனித்து நின்று சந்திக்கக்கூடிய வளங்களையும் திடகாத்திரமான இஸ்லாமிய குடியரசையும் ஈரான் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில் ‘ஈரான் யுரேணிய உற்பத்தியை நிறுத்தாதவிடத்து அது ஒரு தாக்குதலாகவே மாறும்’ எனும் யுத்தக் கருத்தை அமெரிக்க ஜனாதிபதி நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தமையும் வளைகுடாவில் மீண்டும் போர்மேகங்கள் சூழ்ந்திருப்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
Leave a comment