அபுதாபி- ‘ஷெய்ஹ் செயிட்’ விளையாட்டு மைதானத்தில் இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் விறுவிருப்பாகவும் பல எதிர்பார்ப்புடனும் இன்று நடைபெற்ற மூன்றாவது T20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடர் வெற்றியை வென்றதுடன் உலகச் சம்பியன் பட்டத்தையும் இங்கிலாந்து தக்கவைத்துக் கொண்டது.
இலகுவான வெற்றி இலக்கான 130 ஓட்டங்கள் பாகிஸ்தானுக்கு கிடைக்கப் பெற்றிருப்பினும் இலகுவாக வெல்லமுடியும் அல்லது இறுதி இரண்டு ஓவர்களில் வெற்றி வாய்ப்பைப் பெற முடியும் என்ற எண்ணத்திலேயே ஆரம்ப ஆட்டக்காரர்கள் முதல், அணித் தலைவர் வரை நினைத்து ஆடுவதாக அடிக்கடி வர்ணணையாளர்கள் சொல்லிக் கொண்டிருந்ததானது பாகிஸ்தானின் தோல்வியை உறுதி செய்திருந்தன.’ ரண்அவுட்’ மற்றும் மந்தமான துடுப்பாட்டம் பாகிஸ்தானின் வெற்றிக் கனவைக் கலைத்துச் சென்றன.
இதற்கிடையில் பாகிஸ்தானின் உள்ளுர் பத்திரிகைகளும் இணையத்தளங்களும் பாகிஸ்தான் அணியின் தோல்வியை விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அடுத்தமாதம் பங்களாதேசில் நடைபெற உள்ள ஆசியக் கிண்ணப் போட்டிக்கு இவ்வணியில் பல மாற்றங்கள் இடம்பெறப் போவதாகவும் பாகிஸ்தானின் கிரிக்கட் அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
![EngvPak_2725247[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/02/engvpak_27252471.jpg?w=300&h=159)
Leave a comment