கொழும்பு ‘தாமரைக் கோபுரம்’
ஆசியாவின் ஆச்சர்யத்துக்கு இலங்கையைக் கொண்டு செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் முயற்சியின் மற்றுமொரு மைல் கல்லாகத் திகழும் கெழும்பு ‘தாமரைக் கோபுரம்’ உலக நாடுகள் மத்தியில் இலங்கையைக் கோடிட்டுக் காட்டுகின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
கொழும்பு டீ.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் ‘தாமரைக் கோபுரம்’ 104.3 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்படுகின்றது.
சுமார் 350 மீற்றர் உயரமாக இந்த தொலைத்தொடர்பு கோபுரமானது சீன தேசிய இலத்திரனியல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கூட்டுத்தானத்தினால் 30 மாத காலங்களுக்குள் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதற்கான ஒப்பந்ம் கைச்சத்திடும் நிகழ்வூ 2012 ஜனவரி 03ஆம் திகதி செவ்வாய்க் கிழமை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் இடம்பெற்றது. சீன அரசாங்கத்தின் இரண்டு நிறுவனங்களுடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
தொலைத்தொடர்பு கோபுரத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனவரி 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல ஏ.எச்.எம்.பௌசி கொழும்பு மாநகர மேயர் முஸம்மில் சீனப் பிரதிநிதிகள் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்
இந்தக் கோபுரம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் ஆசியாவின் மிக உயர்ந்த கோபுரமாக இது அமையும் என்று கணிக்கப்படுகின்றது.
இந்தக் கோபுரக் கட்டுமாணப் பணிகளிற்கான பண உதவித் தொகையான 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக சீன வங்கியான எக்சிம் வங்கி வழங்கியுள்ளது.
ஆரம்பத்தில் இக் கோபுரம் கொழும்பின் புற நகர் பகுதியான பேலியகொடையில் நிர்மானிக்க தீர்மானிக்கப்பட்டது. பின்னர் டிசம்பர் 2011 இல் அமைச்சரவை முடிவுக்கு இணங்க கொழும்பு நகரின் மையத்தில் இக்கோபுரத்தை அமைப்பதாக முடிவாகியது.
இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தும் ஆணைக்கழுவானது பல்வேறுபட்ட தொலைத்தொடர்பாடல் கோபுரங்களாகவும் மற்றும் பொழுதுபோக்கிற்கான சேவை மத்திய நிலையமாகவும் செயற்படும் வகையில் கொழும்பு “பேரே வாவி” க்கு அருகாமையில் தாமரைக் கோபுரத்தை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
இத் தாமரைக் கோபுரமானது கொழும்பு டீ. ஆர். விஜேவர்தன மாவத்தையில் 3.06 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மானிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தெற்காசியாவிலே மிக உயரமான கோபுரமாக இது முத்திரை பதிக்கப்படுவதுடன் இதன் மூலம் நகரமும் அழகுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கோபுரமானது 4 மாடிகளைக் கொண்ட சுதந்திர ஸ்தானத்தையும் அதன் நடுப்பகுதியில் 8 மாடிகளையும் கொண்டு அமைக்கப்படுவதோடு அதன் மேற்பகுதியில் உருக்கிலான உலோகத்தில் வானலை வங்கிக் கோபுரமும் (என்டனா) வடிவமைக்கப்படவுள்ளது.
இக் கோபுரத்தின் மூலம் ஆகக்குரைந்த பட்சம் 50 ஒளிபரப்பு சேவைகளுக்கும் 50 தொலைக்காட்டசி சேவைகளுக்கும் 20 தொலைத்தொடர்பாடல் சேவைகளுக்கும்மான வசதிகள் உள்ளன.
அத்துடன்கோபுரத்தின் மேல் உச்சித் தலைப்பகுதியில் வானொலித்தொலைத்தொடர்பு ஒலிபரப்பு ஔபரப்பு பாதுகாப்பு சார்ந்த பல்வேறுபட்ட சேவைகளுக்கான வானலை வாங்கியினை இதன் மேல் பொருத்தப்படவுள்ளது. இவ்வானலை வாங்கியானது சுமார் 250 – 350 மீற்றர் உயரத்தில் அமைக்கப்படுவதினால் பாரிய வானலையினை பெரக்குடியதாக இருக்கும்.
மேலும் 8 மாடிகளைக் கொண்ட கோபுர கட்டிடத்தின் தலைப்பகுதியில் காட்சிக்கூடமும் சுழலும் போஜனசாலையும் 1000 பேர் இருக்க்க்கூடிய வகையிலான உற்சவ மண்டபமும் 2 மாடிகொண்ட அதிசொகுசு ஹோட்டல் வசதிகளுடன் தீ வெளிப்படுத்தல் தீ அனைத்தல் அதி செயற்திறன்கொண்ட தாங்கி மற்றும் மின்சார தொலைத் தொடர்பாடல் உபகரணங்களுடன் கூடியதாகவும் இக் கோபுரம் நிர்மானிக்கப்படவுள்ளது.
-news.lk
Leave a comment