மின்னொளியில் ஜொலித்த மீரா பாலிகா நிகழ்ச்சிகள் (படங்கள் இணைப்பு)

காத்தான்குடி மீராபாலிகா மஹா வித்தியாலயத்தில் 24-02-2012 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற மாபெரும் சிறப்பு   நிகழ்ச்சியில் கௌரவ கல்வி அமைச்சர்  திரு. பந்துல குணவர்தன, பிரதி அமைச்சர் அல்ஹாஜ் MLAM.  ஹிஸ்புல்லாஹ் MA. , கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர் எம்.எம்.இஸ்மா லெப்பை, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும்   பலர்  கலந்து சிறப்பித்தனர்.

(படங்களினைப் பெரிதாகப் பார்ப்பதற்கு படத்தின்மேல் ‘கிளிக்’ செய்யவும்).

இந்நிகழ்ச்சியில் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்ட  காத்தான்குடி மீராபாலிகா மஹாவித்தியாலய பெயர்ப்பலகை திரைநீக்கம், பாடசாலை கூடைப்பந்தாட்டக் குழுக்களின் போட்டி, கலை நிகழ்ச்சிகள், மட்/சிசிலியா பெண்கள் கல்லூரியின் பேண்ட்வாத்தியம், 2011ல் ஐந்தாம் தர புலமைப்பரிசுப் பரீட்சையில் சித்தியடைந்த  மாணவ மாணவிகளுக்கும் மற்றும் இதே ஆண்டில் இப்பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட மாணவிகளுக்குமான பாராட்டு, பரிசளிப்பு வைபவங்களும் இந்நிகழ்ச்சிக்கு மெருகூட்டிச் சென்றன.

ஹிஸ்புல்லாஹ் கூடைப்பந்தாட்ட அரங்கில்  மின்னொளியில் இடம்பெற்ற இந்நிகழ்வு இரவு 8:30 மணிவரை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

தகவல்: MBNS.

Published by

Leave a comment