நாட்டில் சில தீய சக்திகளின் தூண்டுதலின் பேரில் இப்போது நடை பெற்றுக் கொண்டிருக்கும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிரான போராட்டங்களை எமது நாட்டில், மக்களால் குப்பைக் கூடைக்குள் தூக்கி எறியப்பட்டிருக்கும் ஜே.வி.பி. போன்ற மக்கள் ஆதரவற்ற கட்சிகளும் நாட்டிற்கு என்னவானாலும் பரவாயில்லை தனது தலைமைத்துவ பதவியை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமெ ன்ற ஆசையில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை சுயநல நோக்குடன் மேற்கொண்டு வரும் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது ஆதரவாளர்களும் ஊக்குவிப்பதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகள் இப்போது வலுவிழந்து வருகின்றன.
எரிபொருள் விலையேற்றத்திற்கு அரசாங்கத்தை குறை கூற முடியாது. உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை எதிர்பாராத அளவிற்கு திடீரென்று அதிகரித்ததே இதற்கான உண்மைக்காரணம் என்பதை இப் போது மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். உலக நாடுகளுக்கு வழங்கும் எரிபொருளில் ஐந்தில் ஒரு பகுதியை ஈரானே உற்பத்தி செய்து விநி யோகிக்கின்றது.
அமெரிக்கா, ஈரானுக்கு எதிரான தடைகளை மேற்கொண்டிருப்பதனால் ஈரான் இப்போது உலக சந்தைக்கு எரிபொருளை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது.
இதனால், உலக சந்தையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது, அதன் விலை அதிகரிப்பது பொருளாதார சித்தாந்தத்தில் ஏற்றுக்கொள் ளப்பட்டுள்ள ஒரு உண்மையான நடைமுறையாகும். ஈரான் முன்னர் இலங்கைக்கு எரிபொருளை முதலில் 6 மாத கடனுக்கும் பின்னர் 9 மாத கடனுக்கும் வழங்கியது. அதனால் இலங்கை அதிக கஷ்டமின்றி மக்களுக்கு எரிபொருளை வழங்கி வந்தது.
இப்போது ஈரானிடமிருந்து கடனுக்கு எரிபொருளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதனால் நாம் பொருளாதார கஷ்டத்தை எதிர் நோக் கியிருக்கிறோம். கிடைக்கும் எரிபொருளுக்கான கடனை வங்கிகளிட மிருந்து தொடர்ந்தும் வாங்கிக் கொண்டிருந்தால் வங்கிகள் வங்குரோ த்து நிலை அடையும் என்பதை உணர்ந்து, நாம் வங்கிகளிடமிருந்து குறைந்த கடனுக்கு எரிபொருளை வாங்கி, அதற்காக எரிபொருளின் கட்டணத்தை அதிகரித்து, எரிபொருளுக்கான இறக்குமதி செலவை ஈடு செய்து வருகிறோம்.
இலங்கை, பெற்றோல் விலையை ஓரளவு குறைவாக வைத்திருந்தமைக்கு காரணம் அதன் விற்பனையினால் அரசாங்கத்திற்கு ஏற்படும் நஷ்டம் மிகவும் குறைவாக இருந்ததே காரணமாகும். எனினும், டீசல் ஒரு லீற்ற ருக்கு 36 ரூபா நஷ்டமும் மண்ணெண்ணெய்க்கு 38 ரூபா நஷ்டமும் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையிலேயே அரசாங்கம் வேறு வழியில்லாத காரணத்தினால் பெற்றோல் விலையை சற்று கூடுதலாகவும் டீசல், மண் ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை அதனைவிட மேலும் கூடுத லாக அதிகரிப்பதற்கான கஷ்ட நிலைக்கு தள்ளப்பட்டது.
பெற்றோல் விலை அதிகரிப்பது இலங்கைக்கு புதியதோர் விடயமல்ல. 1985ம் ஆண்டிலும் 1988ம் ஆண்டிலும் இவ்விதம் பெற்றோல் விலை இலங்கையில் அதிகரித்தது. ஆயினும் அதன் விலை கூடிய விரைவில் வீழ்ச்சியடை செய்தது.
இலங்கையில் ஒரு லீற்றர் பெற்றோல் 149 ரூபாவாக இருக்கும் போது இந் தியாவில் சென்னை நகரில் அது 164ரூபா 74 சதமாகவும் புதுடில்லியில் 152 ரூபா 28 சதமாகவும், கொல்கத்தாவில் 155 ரூபா 21 சதமாகவும், மும் பாயில் 161 ரூபா 77 சதமாகவும், பாகிஸ்தானில் 122 ரூபா 22 சதமாகவும் சிங்கப்பூரில் 204 ரூபா 65 சதமாகவும் தாய்லாந்தில் 140 ரூபா 8 சதமாகவும் ஜப்பானில் 227 ரூபா 92 சதமாகவும், கென்யாவில் 154 ரூபா 91 சதமாகவும், டென்மார்க்கில் 244 ரூபா 56 சதமாகவும், அவுஸ் திரேலியாவில் 177 ரூபா 30 சதமாகவும், பிரேசிலில் 181 ரூபா 93 சதமா கவும், கனடாவில் 152 ரூபா 55 சதமாகவும், நியுசிலாந்தில் 208 ரூபா 70 சதமாகவும், நோர்வேயில் 300 ரூபாவாகவும் இருந்து வருகின்றது.
இந்த விலைகளை ஒப்பிட்டு பார்க்குமிடத்து இலங்கையில் எரிபொருளின் விலை கணிசமான அளவுக்கு அதிகரித்துவிட்டது என்ற எதிர்கட்சியின் வாதம் தவறு என்பதை நாம் நிரூபிக்கக்கூடியதாக இருக்கின்றது.
2003ம் ஆண்டில் இலங்கையில் 2 இலட்சத்து 74 ஆயிரத்து 631 மோட்டார் கார்கள் இருந்தன. 2011ல் இதன் எண்ணிக்கை 4 இலட்சத்து 68 ஆயி ரத்து 168 ஆக அதிகரித்தன. 2003ல் முச்சக்கர வண்டிகள் ஒரு லட்ச த்து 69 ஆயிரத்து 319 ஆக இருந்தன. இப்போது அது 6 இலட்சத்து 67 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளன. 2003ம் ஆண்டு மோட்டார் சைக்கிள்கள் 10 இலட்சத்து 10 ஆயிரத்து 344 ஆக இருந்தன. இது 2011ல் 23லட்சத்து 54 ஆயிரத்து 163 ஆக அதிகரித்துள்ளன. 2003ம் ஆண்டு பஸ்கள் 69ஆயிரத்து 651 ஆக இருந்தன. இவை 2011ம் ஆண்டு 88 ஆயிரத்து 746 ஆக அதிகரித்துள்ளன.
இவ்விதம் 2003ல் 20 இலட்சத்து 73 ஆயிரத்து 869 வாகனங்கள் இருந்தன. இவை 2011ம் ஆண்டு 44 லட்சத்து 79 ஆயிரத்து 732 ஆக அதிகரித் துள்ளது. இந்த வாகனங்கள் மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கு உதவுவ தற்காகவே அரசாங்கம் தருவித்தது. அதனால் தான் இப்போது இவற் றுக்கு கூடுதலான எரிபொருளும் தேவைப்படுகிறது.
எரிபொருளின் விலையேற்றத்திற்கு அரசாங்கத்தின் மீது முழுப்பொறுப்பை யும் சுமத்துவது நல்லதல்ல. ஒரு வளர்ந்து வரும் இலங்கை போன்ற நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு எரிபொருள் அத்தியாவசிய மாக இருந்து வருகின்றது. அதனால்தான் நாம் எரிபொருளின் விலை அதி கரிப்பதற்கு ஏற்புடைய வகையில் எங்கள் வாகனப் பாவனைகளை கூடியவரை சிக்கனமாக பயன்படுத்துவது நல்லது.
இதைவிடுத்து அரசியலில் செல்லாக்காசாக இருக்கும் எதிர்கட்சிகளின் போலிப் பிரசாரங்களை நம்பி ஏமாந்து விடமால், யதார்த்தத்தை விள ங்கி நாட்டுக்கு தீங்கிழைக்காத வகையில் மக்கள் நடந்து கொள்வது அவசியமாகும்.
-17-02-12 தினகரன் ஆசிரியர் தலையங்கம்.
Leave a comment