மின் கட்டணங்களில் திருத்தம்; புதிய மாற்றம் இன்று வெளியீடு

எரிபொருள் விலை உயர்வையடுத்து மின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்வது குறித்து இன்று (15) அறிவிக்க உள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக் குழு தெரி வித்தது.

சனிக்கிழமை முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பெற்றோ லியக் கூட்டுத்தாபனம், மின்சார சபைக்கு வழங்கும் எரிபொருள் லீற்றருக்கான விலை யை 25 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மின் கட்டணத்தில் மாற்றம் செய்வது தொடர்பான இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படவுள்ளது.

2012ல் மின்சார சபை 30 பில்லியன் ரூபா நஷ்டம் ஈட்டுமென ஏற்கனவே மதிப்பிடப்பட்டுள்ளது. எரி பொருள் விலை உயர்வையடுத்து மேலும் 40 பில்லியன் நஷ்டம் எதிர்பார்ப்பதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது. மின் உற்பத்திக்காக வழங்கும் ஹைசல்பைட் விலை அதிகரிக்கப்பட்ட போதும் பெற் றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்து 34 ரூபா நஷ்டம் ஈட்டுவதோடு லோ சல்பைட் மூலம் 31 ரூபா நஷ்டம் ஈட்டிவருவதாகவும் அறிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஒரு லீற்றர் டீசல் மூலம் மின்சார சபை 26 ரூபா நஷ்டம் ஈட்டி வந்த அதேவேளை கட்டணம் அதிகரித்த நிலையிலும் 3 ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ள தாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூறியது. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் 3 வாரங் களுக்குப் போதிய எரிபொருள் கையிருப்பில் இருப்பதாகவும் அறிவிக்கப் படுகிறது.

Thinakaran.

Published by

Leave a comment