காரிருள், குறுகியநேர பெருமழை: நேற்று கொழும்பின் பல பகுதிகளில் வெள்ளம்

பிற்பகலில் உருவான கும்மிருட்டினால் பரபரப்பு: வீதிகள், வாகனங்களில் மின் விளக்குகள் ஒளிர்வு

‘பகலில் ஓர் இரவு’ என்ற வார்த்தையை அக்கால தமிழ் சினிமா ஒன்றின் மூலமே நாமெல் லாம் கேள்வியுற்றிருக் கிறோம். ஆனால் ‘பகலில் ஓர் இரவு’ என்பதை கொழும்பு மற்றும் சுற்றுப் புறங்களில் நேற்றுத்தான் முதன் முதலில் காணக்கூடியதாக இருந்தது.

கொழும்பு மாத்திரமன்றி அதன் சுற்றுப்புறங் களில் உள்ள பெரும்பாலான பிரதேசங்கள் நேற்றுப் பிற்பகல் 3.15 மணியளவில் திடீரென இருளடைந்து சென்றன. ஆரம்பத்தில் மழைக்கால இருள்போன்று ஆகாயம் இருளடையத் தொடங்கியது. வழமைபோன்ற மழைக்கால இருள் மிக வேகமாக மாற்றமடைந்தது. ஆகாயம் முழுமையாக இருண்டு போனது.

எங்குமே இருள் பரவியது. எதிரே வருபவரை அடையாளம் காண்பதும் சிரமமாக இருந்தது. பிற்பகல் 3.15 மணியானதும் இரவு 7.30 மணிபோன்ற தோற் றத்தைத் தந்தது.

திடீரென அசாதாரணமாக உருவாகிய இந் நிலைமையினால் மக்கள் ஓரளவு பரபரப்படைந்த னர். கொழும்பில் பிற்பகல் 3.30 மணியளவில் வீதிவிளக்குகளும் எரிய விடப்பட்டன. வீதிகளில் வாகனங்கள் விளக்குகளை ஒளிரவிட்டபடியே சென்றன. சற்று நேரத்தின் பின்னர் இடிமுழக்கத்து டன் பலத்த மழையும் ஆரம்பமானது. கொழும்பு, நீர்கொழும்பு, வத்தளை, தெஹிவளை, போன்ற ஏராளமான பிரதேசங்களில் மழைபொழிந்தது.

கொழும்பு ஆர்.ஏ.டி.மெல் மாவத்தையில் ஒரு அடிக்கு மேல் வெள்ளம் தேங்கியதால் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டது. மாற்றுவழி ஊடாக வாகனங்கள் சென்றன. கிரான்ட்பாஸ், தொமட்டகொட, மருதானை பகுதிகளிலும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின. நீர்கொழும்பு, வத்தளை வீதிகளிலும் வெள்ளம் பாய்ந் தோடியது. கொழும்பின் சில பகுதிகளில் வீடுகளுக்கு உள்ளேயும் வெள்ளநீர் புகுந்தது.

வீதிகளில் வாகனங்கள் தடைப்பட்டு நின்றதால் வாகன நெரிசல் ஏற்பட்டது. அரைமணிநேர மழையே பெரும் வெள் ளத்தை ஏற்படுத்தியது. கொழும்பில் நேற்று பகலில் திடீரெனத் தோன்றிய இருள் சுமார் அரைமணித்தியாலம் சென்ற பின் னரே படிப்படியாக நீங்கத் தொடங்கியதுடன், வானமும் சிறிது வெளுக்கத் தொடங்கியது.

நேற்றைய இந்நிகழ்வை மக்கள் புதுமை யாகவே நோக்கினர். இவ்வேளையில் கொழும்பில் பல்வேறு பிரதேசங்களில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இதுஇவ்விதமிருக்க, நேற்றையதினம் ஏற்பட்ட அசாதாரண காலநிலை தொடர் பில் வானிலை அவதான நிலையத்தின் கடமைநேர அதிகாரியொருவர் தினகரனுக்கு விளக்கமளிக்கையில், நேற்றுபிற்பகல் மேல் மாகாணத்தின் வான்பகுதியில் கரு முகில்கள் அதிகமாகக் காணப்பட்டமையால் பிற்பகல் மூன்று மணிக்கே கருமையான நிலை தோன்றியது.

மேல்மாகாணத்தில் மாத்திரமே இந்த நிலைமை காணப்பட்டது. ஏனைய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தபோதும் மேல்மாகாண வான்பரப்பில் மாத்திரமே கருமுகில் அதிகமாகக் காணப்பட்டது. இதேசமயம் கிழக்கின் பெரும்பாலான பகுதிகளிலும் நேற்று கடும்மழை பெய்தது. இலங்கையில் தற்பொழுது வடகிழக்குப் பருவப்பெயர்சி காலநிலை நிலவி வருகிறது.

இதனால் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங் களில் மழைவீழ்ச்சி அதிகமாகக் காணப்படும். எனினும், மேல், சப்ரகமுவ, கொழும்பு உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் பிற்பகல் மற்றும் மாலைவேளைகளில் இடியுடன் கூடிய மழைபெய்யும். இதற் கமைய மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

இந்த நிலை எதிர்வரும் சில தினங்களுக்கு நீடிப் பதற்கான சாத்தியக் கூறுகள் காணப் படு கிறன. மன்னார் மற்றும் வடபகுதி கடற்பரப் பில் மணிக்கு 20 கிலோ மீற்றர் முதல் 40 கிலோ மீற்றர் வரையில் காற்று வீசும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Thinakaran.

Published by

Leave a comment