Saint. Valentine’s Day அருட்தொண்டர். வலண்டைன் தினம்.

வாய்க்கு மெல்ல அவல் கிடைத்தது போல் ஊடகங்களின் வாய்களுக்கும் கைகளுக்கும் கட்டப்பட்ட விலங்குகளை அவிழ்த்துவிட்டது போல் ஓர் பூரிப்பு!

தனியார் ஊடகங்களின் ஊடுறுவலால் கிழக்காசிய நாடுகளுக்குள் சுமார் இருபது வருடங்களாக நோய்பரப்பும் கிருமிகளாய் பரவியதையடுத்து எங்கள் மனங்களிலும் சிந்தனைகளிலும் இன்று ஓர் தனியிடத்தை இந்த காதலர் தினம் ஏற்படுத்தி இருக்கிறது.

கி.பி 269ம் ஆண்டுகளில் ரோமாபுரியில் கிறிஸ்துவ மதத்திற்காக உயிர்நீத்த  அருட்தொண்டர். வலண்டைன் (Saint. Valentine)  என்பவரது அடக்கஸ்தலம், ரோம்நகரின்  Church of Saint Praxed  எனும் தேவாலயத்தில் இருக்கின்றது.

இவர் ஒரு கிறிஸ்துவ மதத்திற்காக உயிர்நீத்த ரோமானியர். ரோம் மக்கள் இவர் உயிர் நீத்த தினமான பெப்ரவரி 14ம் திகதியை தங்களது நாட்காட்டியில் மதிப்புமிக்க தினமாகவும் அன்றைய நாளை விடுமுறை தினமாகவும் ஆராதனை தினமாகவும் அனுஷ்டிட்டு வந்தனர். இவரது நினைவுச் சிலை ரோம் நகரில்  உள்ள Church of Saint Praxed மற்றும் அயர்லாந்தின் டுப்ளின் நகரில் உள்ள Whitefrier Street Carmelite Church  ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன.

ரோமன் கிறிஸ்தவரான செண்ட் வலண்டைன் கிறிஸ்வ மதத்தின் அதாவது மதம் சம்பந்தமான தகவல்களைத் தொகுத்து வந்தார். அப்போது ரோமாபுரியை ஆட்சி செய்த மண்னுக்கும் மக்களுக்கும் இவரது கிறிஸ்துவ மதத்தின் தொகுப்புக்களும் மதப்பரப்புச் செய்தலும் பிடிக்காமையால் சிறையில் இவர் அடைக்கப்பட்டார். ரோமை ஆட்சி செய்த மன்னர் கிளோடியஸ் பல தெய்வக் கொள்கையைக்  (paganism) கொண்டவராகக் காணப்பட்டார்.

சிறைச்சாலையில் இவரை அடைத்து வைக்கவில்லை. பல வேலைகளை காவலர்கள் இவரைக் கொண்டு செய்வித்தனர். சிறைச்சாலையில் இவரது நடத்தைகள் அங்குள்ள சிறைச்சாலை உத்தியோகத்தர்களையும் அரச குடும்பங்களையும் கவர்ந்தது. சிறைக்குப் பொறுப்பான அதிகாரியின் மகளால் காதல் கொண்டு ஈர்க்கப்பட்டார். எனினும் மத நம்பிக்கையே குறிக்கோலாக இருந்த இவர் காதலோ திருமணமோ தன்னை மாற்றிவிடும் என அஞ்சி தொடர்ந்து தனது கொள்கையில் உறுதியாக இருந்தார். ரோம் சாம்ராஜ்யத்தின் ஓர் இராணுவ வீரனாக  நீர் மாறவேண்டும் என மன்னர் கிளோடியஸ் இவருக்கு அழுத்தம் கொடுத்தார். மன்னனின் விருப்பத்தை நிறைவேற்றத் தவறியதாலும் தொடர்ந்தும் கிறிஸ்துவ மதத்தைப் பிரச்சாரம் செய்து வந்ததாலும் கொலை செய்யப்பட்டார்.

கி.பி 400களில் வாழ்ந்த மக்கள் இவர் உயிர்நீத்த தினத்தை புனிதநாளாகக் கருதி ஆராதனைகளிலும் அன்பளிப்பு, இனிப்பு வழங்குவதிலும் ஈடுபட்டு வந்தனர்.

பின்னர் 1960களில் உலகின் பல நாடுகளிலும் பரவலாக இது காதலரிகளின் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இஸ்லாம் காட்டித்தந்த அழகிய வழிகளை விட்டெறிந்து ஒரு கிறிஸ்தவ போதகர் உயிர் நீத்த இந்நாளை முஸ்லிம் என்ற சகோதரர்களும் சகோதரிகளும் வெட்கமில்லாமல் கொண்டாடுவது வலண்டைன் எனும் ஒரு கிஸ்தவருக்கு அவர்கள் கொடுக்கும் ஆராதனைகளும் கண்ணியமுமே தவிர வேறொன்றுமில்லை.

MJ.

Published by

Leave a comment